ரஜினி - கமல் - அமீர் காம்பினேஷன்!.. மரண மாஸ் ஸ்டோரி!.. அட அது மட்டும் நடந்திருந்தா!..
தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அமீர். பாலாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். அடுத்து ஜீவாவை வைத்து அவர் இயக்கிய ‘ராம்’ திரைப்படம் அமீர் எந்த மாதிரியான இயக்குனர் என்பதை காட்டியது. ஏனெனில் அது போன்ற ஒரு கதையை எந்த இயக்குனரும் படமாக்கியது இல்லை.
கார்த்தியை வைத்து அவர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. அமீர் சிறந்த இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். அறிமுகமான முதல் படத்திலேயே கார்த்தியை அவ்வளவு சிறப்பாக நடிக்க வைத்திருப்பார். இப்படத்தில் நடித்ததற்காக பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.
அந்த படத்தை பார்த்த ரஜினி அமீரை அழைத்து மனமுவந்து பாராட்டினார். அப்போது எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க என ரஜினி சொல்ல அமீர் அவருக்கு ஒரு கதையை சொன்னார். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய அமீர் ‘ரஜினிக்கு ஒரு சரித்திர கதையை சொன்னேன். மக்களுக்காக போராடும் ஒருவனை புரிந்துகொள்ளாமல் அந்த மக்களே அவரை கொன்று விடுவார்கள். அவரின் மகன் பின்னாளில் அந்த மக்களை பிரச்சனையிலிருந்து காப்பாற்றுவான் என்பதுதான் கதை. ரஜினி சாருக்கு இந்த மிகவும் பிடித்திருந்தது. ‘கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்தால் ஓகேவா?’ என கேட்டார். ‘கருப்பு தின்ன கூலியா சார்’ என்றேன்.
அதன்பின் கமல் சாரிடம் பேசும்போது அவரும் சம்மதம் தெரிவித்தார். ஆனால், கமல் சார் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதையும், அன்பும் உண்டு. தயாரிப்பு என வரும்போது எனக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது. அது கமல் சாருக்கு பிடிக்காமல் போய் எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவு கெட்டுபோய் விடுமென பயந்தேன். எனவே, இதை வேறு ஒருவர் தயாரிக்கட்டும் என அவரிடம் சொன்னேன். அதனால், அந்த படம் டேக்ஆப் ஆகவில்லை. இதே கதையை விஜயிடமும் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை’ என அமீர் கூறியிருந்தார்.