அவரு கோகுலத்தில் இருக்க வேண்டிய கண்ணன்!.. கார்த்திக் ஹீரோ என்றதும் பதறிய இயக்குனர்!..
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக 80களில் ஆதிக்கம் செலுத்தி வந்த நடிகர் கார்த்திக். நவரச நாயகன் என்று அன்பால் அழைக்கப்படும் கார்த்தில் பார்ப்பதற்கு அழகான தோற்றத்துடன் பெண்களை வசீகரக்கும் பொலிவுடனும் இருப்பவர். எந்நேரமும் சுறுசுறுப்பாகவும் துருதுருவெனவும் இருக்கும் கார்த்திக் பேசும் தமிழ் சற்று விளங்காத வகையில் தான் இருக்கும்.
வாயில் எதையோ போட்டு பேசுவது போன்று கொழ கொழவென பேசும் கார்த்திக் அதையும் ரசிக்கும் பெண் ரசிகைகள் தான் ஏராளம். ரசிகைகள் ஒருபுறம் இருந்தாலும் பிரபலங்களில் பல நடிகைகள் இவரின் மீது அன்பு கொண்டு இருந்தனர்.
இதையும் படிங்க :பாம்புக்கு மகுடி ஊதும் இளையராஜா.. உதயநிதிக்கு கிடைச்ச பெருமை கூட கிடைக்கலயே!..
கார்த்திக் மேல் காதல் இல்லாத நடிகைகள் இருக்கமாட்டார்கள். அதற்கேற்றாற் போல் கார்த்திக்கும் பெண்களை சுற்றியே தான் வருவாராம். ஒர் ப்ளே பாயாகவே வலம் வந்திருக்கிறார் கார்த்திக். ரஜினி , கமல் என முக்கிய இரு பெரும் புள்ளிகளாக இருந்தவர்களுக்கு மத்தியில் காதல் மன்னனாக தன் இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டவர் கார்த்திக்.
கார்த்திக்கை பொருத்தவரைக்கும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை கண்டிப்பாக காதல் வலையில் சிக்க வைத்து விடுவார்.அந்த அளவுக்கு பெண்களை கவர்வதில் வல்லவராக இருந்திருக்கிறார் கார்த்திக் என்று ஒரு பேட்டியில் பயில்வான் ரெங்கநாதன் கூறியிருக்கிறார். மேலும் சூட்டிங் சமயத்திலும் திடீரென சுற்ற கிளம்பிவிடுவாராம். இல்லையென்றால் கூட நடிக்கும் நடிகைகளுடன் அவுட்டிங் கிளம்பிவிடுவாராம்.
இதையும் படிங்க :ஜெய்சங்கரின் படத்தின் காபி தான் இந்த படமா?.. தயாரிப்பாளருக்கு தொடரும் நெருக்கடி!..
இதனாலேயே இவரை கமிட் செய்ய ஏகப்பட்ட இயக்குனர்கள் தயங்குவார்களாம். அந்த வகையில் தர்மபத்தினி படத்திற்காக அந்த படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக்கை ஹீரோவாக போடலாம் என்று கூற படத்தின் இயக்குனரான அமீராஜ் ஐய்யயோ கார்த்திக்கா? நீங்கள் கொடுத்த பணத்தை கூட திரும்ப கொடுத்து விடுகிறேன். ஆனால் கார்த்திக் மட்டும் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.
ஏனெனில் ஒழுங்கா சூட்டிங்கிற்கு வரமாட்டார். பெண்களுடன் ஊர் சுற்ற கிளம்பிவிடுவார் என்று பயந்தே வேண்டாம் என்று சொன்னாராம். ஆனால் தயாரிப்பாளரான அழகன் தமிழ்மணியோ அப்படியெல்லாம் நடக்காது என்று சமாதானம் சொல்லி அதன் பிறகே இயக்குனர் சம்மதித்திருக்கிறார்.