Cinema News
மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…
Oomai vizhigal: 80களில் விஜயகாந்தின் நடிப்பில் வந்த பெரும்பலான திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து பெரிய ஹிட் அடித்தது. அவரின் பல திரைப்படங்கள் 150 நாட்களுக்கும் மேல் ஓடி நல்ல வசூலை பெற்றது. ஹீரோவாக நடிக்கும்போது விஜயகாந்த் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தயங்கியதே இல்லை.
அவர் நடித்த பல படங்களில் அவருக்கு அப்பாவாக அவரே நடித்திருக்கிறார். ஊமை விழிகள், செந்தூரப்பூவே உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். அவர் கெஸ்ட் ரோலில் நடித்த படங்களும் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..
இதில் ஊமை விழிகள் படம் முக்கிய படமாகும். திரைப்படக்கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய இப்படத்தை அரவிந்த்ராஜ் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் டி.எஸ்.பி தீனதயாளன் எனும் வேடத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். அதிரடி சண்டை காட்சிகளோ சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியிருந்தது. மேலும், சந்திரசேகர், அருண் பாண்டியன், ஜெய்சங்கர், செந்தில், சரிதா, கார்த்திக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்ட ஒருவன் அழகான பெண்களை வேட்டையாடும் திரில்லர் கதை. இப்படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருந்தது. இப்படி ஆக்ஷன் கலந்த சூப்பர் திரில்லரை தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திருக்கவே இல்லை. ஊமை விழிகள் சூப்பர் ஹிட் அடிக்கவே இப்படத்தின் தொடர்ச்சி போல ‘மூங்கில் கோட்டை’ என்கிற படம் உருவானது.
அரவிந்தராஜ் இயக்கிய இப்படத்திலும் விஜயகாந்த் நடித்திருந்தார். சுமார் 70 ஆயிரம் அடி பிலிம் சூட் செய்த நிலையில் இப்படம் அப்படியே நிறுத்தப்பட்டது. இதே டீம் அப்படியே ‘உழவன் மகன்’ படத்தில் இணைந்ததால் மூங்கில் கோட்டை படம் டிராப் ஆனது. அதன்பின் அதை அப்படியே விட்டுவிட்டார்கள்.
சமீபத்தில் விஜயகாந்த் உடநலக்குறைவால் காலமானார். இந்நிலையில், இந்த படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில் அரவிந்தராஜ் இறங்கியுள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘மூங்கில் கோட்டை படத்தில் இன்னும் எடுக்கப்படாத காட்சிகளில் ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்தை கொண்டு வந்து எடுக்க திட்டமிட்டிருக்கிறேன். அது சாத்தியம்தான். அதேபோல், இந்த படத்திற்கு பின் முழுக்க முழுக்க ஏஜிங் தொழில்நுட்பத்தில் ஒரு முழு விஜயகாந்த் படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறேன்’ என சொன்னார்.
இதையும் படிங்க: கே. ராஜனிடம் கோபப்பட்டு கத்திய விஜயகாந்த்!.. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்!…