Cinema News
இதெல்லாம் ஒரு பாட்டா?!.. இளையராஜாவை அசிங்கப்படுத்தி அனுப்பிய இயக்குனர்!..
Ilayaraja: இளையராஜா இசையுலகில் எப்படிப்பட்ட இடத்தை பிடித்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பல வருடங்கள் அவர் வாய்ப்பு தேடி அலைந்து அவமானப்பட்ட கதையெல்லாம் யாருக்கும் தெரியாது. சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது சுலபமில்லை. எளிதில் யாரையும் நம்பி வாய்ப்பு கொடுத்துவிட மாட்டார்கள்.
ஏற்கனவே ஹிட் பாடல்களை கொடுத்துக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் பக்கம் போவார்களே தவிர புதிய இசையமைப்பாளர் என்கிற பரிசோதனையை முயற்சியை யாரும் எடுக்கமாட்டார்கள். அவர்களை குறை சொல்லவும் முடி. ஏனெனில், அவர்களுக்கு தேவை வெற்றிதான். புதிதாக எதாவது முயற்சி செய்து படம் தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வது என்கிற பயம் பலருக்கும் இருக்கும்.
ஏனெனில் சினிமா அதிக முதலீடு செய்து செய்யப்படும் ஒரு தொழில்தான் பலருக்கும். எனவே, ரிஸ்க் எடுக்கமாட்டார்கள். புதிதாக ஒருவர் வரவேண்டுமெனில் ஒருவர் அவரை நம்ப வேண்டும். ரஜினியை பாலச்சந்தர் நம்பினார், அப்படி இளையராஜாவை நம்பியது கதாசிரியர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம்தான்.
சென்னை வந்து சில இசையமைப்பாளர்களிடம் வேலை செய்து கொண்டிருந்தார் இளையராஜா. ஒருபக்கம், தனது சகோதரர்களுடன் இணைந்து இசைக்கச்சேரிகளை நடத்திக்கொண்டிருந்தார். சினிமாவில் இசையமைப்பாளராக வேண்டும் என முடிவெடுத்த இளையராஜா பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டார்.
அப்போது இளையராஜா வாலிபனாக இருந்தார். எனவே, அவரை யாரும் நம்பவில்லை. 1971ம் வருடம் முத்துராமனும், சரோஜாதேவியும் இணைந்து நடித்த உயிர் என்கிற படத்தில் இசையமைக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பை கொடுத்தவர் அப்படத்தின் இயக்குனர் சோமு.
வாய்ப்பு கிடைத்தை என்ணி துள்ளி குதிக்கிறார் இளையராஜா. குலதெய்வ வழிபாடெல்லாம் செய்து போட்ட ட்யூன்களை எடுத்துக்கொண்டு இயக்குனரை பார்க்க போகிறார். அங்கு அப்படத்தின் தயாரிப்பாளரும் இருக்கிறார். இளையராஜா போட்டு காட்டிய டியூன்களை கேட்டு ‘இதெல்லாம் ஒரு பாட்டா?.. நல்லா இல்லை’ என சொல்லி அவர்கள் இருவரும் ராஜாவை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்கள்.
அதன்பின் 5 வருடங்கள் கழித்து பஞ்சு அருணாச்சலம் மூலம் அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இளையராஜா. அதன்பின் 80களில் தமிழ் சினிமாவையே தனது இசையால் காப்பாற்றும் கடவுளாகவே அவர் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சூரியை காலி செய்த மாரி!.. வாழை அடித்த அடியில் காணாமல் போன கொட்டுக்காளி..