More
Categories: Cinema History Cinema News latest news

இயக்குனரை தேடி ஆற்றங்கரையை சுற்றிய கமல்.. முதல் படத்துலயே இப்படியா?

சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கி இப்போது வரை நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். சிறு வயதிலேயே ஏ.வி மெய்யப்ப செட்டியாரிடம் வாய்ப்பு கேட்டு களத்தூர் கண்ணம்மா திரைப்படம் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு பல படங்களில் நடித்து விட்டார் கமல்ஹாசன். கமல்ஹாசனின் திரைப்படங்களில் சீரியஸாக அவர் நடித்த திரைப்படங்களை விடவும், நகைச்சுவையாக நடித்த திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. சிங்கார வேலன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், தெனாலி மாதிரியான திரைப்படங்கள் அதிக நகைச்சுவையை கொண்டிருக்கும் படங்களாகும்.

Advertising
Advertising

kamal

கமல்ஹாசன் நடித்த திரைப்படங்களில் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது 16 வயதினிலே திரைப்படம். இந்த படம் பாரதிராஜாவிற்கு முதல் படமாகும். ஆனால் அப்போதே நடிகர் கமல்ஹாசன் பெரும் நடிகராக இருந்தார்.

பாரதிராஜாவிற்கு வந்த கோபம்:

பொதுவாக பெரும் நடிகர்களை வைத்து படம் எடுக்கிறார்கள் என்றால் அந்த நடிகர் பேச்சைதான் இயக்குனரே கேட்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆனால் பாரதிராஜா அப்படி கிடையாது. அவரது முதல் படத்திலேயே இயக்குனர் என்கிற நிலையில் இருந்து சிறிதும் இறங்காமல் பணிப்புரிந்தார்.

இந்த நிலையில் ஒரு நாள் படப்பிடிப்பிற்கு வருவதற்கு தாமதமாக்கியுள்ளார் கமல்ஹாசன். இதனால் கோபமான பாரதிராஜா இன்னைக்கு ஷூட்டிங் கிடையாது எல்லாம் கிளம்புங்கள் என பாக்கியராஜுடம் சத்தம் போட்டுவிட்டு அங்கிருக்கும் ஆற்றங்கரைக்கு சென்றுவிட்டார்.

அதன் பிறகு வந்த கமல்ஹாசன் இந்த செய்தியை கேள்விப்பட்டு நேராக பாரதிராஜாவை தேடி ஆற்றங்கரைக்கே சென்றுள்ளார். அங்கு பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கமல், அவரை சமாதானப்படுத்தி படப்பிடிப்புக்கு அழைத்து வந்துள்ளார். இந்த நிகழ்வை பாக்கியராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: நாசரின் மூக்கை பார்த்து தேடி வந்த பட வாய்ப்பு… இப்படிலாம் யாருக்கும் நடந்துருக்காது!

Published by
Rajkumar

Recent Posts