
Cinema History
நீயெல்லாம் ஏன்டா நடிக்க வந்த!…கெட் அவுட்…. விஜய்சேதுபதியை விரட்டிய இயக்குனர்….
துவக்கத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் கிடைத்து படிப்படியாக முன்னேறியவர் விஜய் சேதுபதி. தற்போது ஹீரோ, வில்லன், கேமியோ என அசத்தி வருகிறார். ஏராளமான படங்களில் நடிக்கும் நடிகராக அவர் மாறியுள்ளார்.
ஆனால், துவக்கத்தில் வாய்ப்பு தேடி அலைந்து படாத பாடு பட்டுள்ளார். ஒரு திரைப்படத்தில் நடிகர்களை தேர்ந்தெடுக்க ஆடிஷன் நடத்துவார்கள். அதாவது, ஒரு குறிப்பிட்ட காட்சியை கூறி நடிக்க வைத்து அவர் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தாமனவரா என பார்ப்பார்கள்.
பொருத்தமாக இருந்தால் அவரை அப்படத்திற்கு தேர்ந்தெடுப்பார்கள். சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பலரும் பல ஆடிஷன்களில் கலந்து கொண்டு வாய்ப்பில்லாமல் திரும்புவார்கள்.சிவகார்த்திகேயன் முதல் பலரும் இதை சந்தித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரவுடி பேபி பாடலின் மூலம் தனுஷ் சம்பாதித்தது எத்தனை கோடி தெரியுமா? அப்படியே ஷாக் ஆகிடுவீங்க!
தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வரும் மிஷ்கின் இயக்கிய திரைப்ப்டம் நந்தலாலா. இப்படத்தின் ஆடிஷன் நடந்த போது நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். ஆனால், அவர் நடிப்பை பார்த்து கடுப்பான மிஷ்கின் ‘நீயெல்லாம் ஏன்டா நடிக்க வந்த?…’என கண்டபடி திட்டிவிட்டு ‘கெட் அவுட்’ என கூறிவிட்டார் மிஷ்கின்.
அதன்பின் வாய்ப்புகள் கிடைத்து விஜய் சேதுபதி வளர்ந்துவிட்டர். இது நடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 10 வருடங்களில் மிஷ்கினின் மீதுள்ள கோபத்தில் அவரை விஜய் சேதுபதி சந்திக்கவே இல்லை.
சமீபத்தில் இந்த தகவலை பகிர்ந்த மிஷ்கின் ‘நந்தலாலாவுக்கு பின் நான் விஜய்சேதுபதியை சந்திக்கவில்லை. சில இடங்களில் பார்க்க நேர்ந்தாலும் இருவரும் கடந்து சென்று விடுவோம். திடீரென ஒரு நாள் என் அலுவலகம் தேடி வந்தார்.

vijay sethu
உங்களை சந்திக்காமல் இருந்தது என் தவறு என மன்னிப்பு கேட்டார். அன்று இரவு 8 மணி நேரம் பேசினோம். அதன் பின் பிசாசு 2 படப்பிடிப்பில் இருந்த போது ‘நான் உங்களோடு 2 நாட்கள் இருக்க வேண்டும். ஒரு சின்ன ரோல் கொடுங்க’ எனக்கேட்டார்.
எனவே, அப்படத்தில் இடம் பெற்ற ஒரு கதாபாத்திரத்தை கொஞ்சம் மேருகேற்றி அவரை நடிக்க வைத்தேன். சுமார் 16 நிமிடம் அவர் படத்தில் வருகிறார். அசத்தலாக நடிக்கிறார். அவர் சினிமாவை வேறு மாதிரி பார்க்கிறார். அவருக்குள் ஒரு குழந்தை இருக்கிறான் என மிஷ்கின் கூறியுள்ளார்.