More
Categories: Cinema News latest news

அந்த இயக்குனர் சொல்றது உண்மையில்லை.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ரம்!..

1990 ஆம் ஆண்டு வெளிவந்த என் காதல் கண்மணி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விக்ரம். அதன் பிறகு நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் 1999 இல் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம்தான்.

அந்த படத்திற்கு பிறகுதான் இவருக்கு சீயான் என்கிற பெயர் வந்தது. பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் விக்ரம் நடித்துள்ளார். தற்சமயம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

Advertising
Advertising

vikram

இந்த நிலையில் பிரபல ஹிந்தி இயக்குனர் படத்தில் இருந்து வாய்ப்பு கிடைக்காமல் போனதை குறித்து கருத்தை பகிர்ந்துள்ளார் விக்ரம். பிரபல ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் தற்சமயம் பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் இருக்கிறார்.

அவர் இயக்கிய கென்னடி என்கிற திரைப்படம் அங்கு திரையிடப்பட உள்ளது. இந்த திரைப்படத்தில் ராகுல் பட், சன்னி லியோன் போன்றோர் நடித்திருந்தனர். இந்த படம் குறித்து கேன்ஸ் விழாவில் அனுராக் பேசும்போது “இந்த படத்தை நான் வேறொரு நடிகருக்காக எழுதினேன். அவரது பெயரும் கூட கென்னடிதான். அவரை நான் தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் எனக்கு எந்த பதிலும் அளிக்காததால் வேறு நடிகரை வைத்து படத்தை எடுத்தேன்” என கூறியுள்ளார்.

அப்படி அவர் கூறியது விக்ரமைதான், விக்ரமின் நிஜ பெயர் கென்னடி. இந்த விஷயத்தை அறிந்த விக்ரம் தனது டிவிட்டர் பக்கத்தில் “ நீங்கள் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்ததாக கூறியிருந்தீர்கள். இதை அறிந்ததும் நான் எனது மின்னஞ்சல் மற்றும் மெசேஜ்களை சோதனை செய்தேன். உங்களிடமிருந்து எந்த தகவலும் அதில் வரவில்லை. நீங்கள் என்னை தொடர்பு கொண்ட ஐடி 2 வருடங்களாக செயல்பாட்டில் இல்லை. எனது வாட்ஸாப் எண்ணையும் நான் முன்பே மாற்றிவிட்டேன். அதனால் உங்கள் செய்தி எனக்கு வரவில்லை. இருந்தாலும் உங்களை அழைத்து நான் இதை பற்றி பேசியிருந்தேன்.” என அனுராக்கின் வாதத்திற்கு எதிர்ப்பு பதில் அளித்திருந்தார் விக்ரம்.

அதற்கு பதிலளித்த அனுராக் “இந்த பிரச்சனையின்போது விக்ரம் என்னை தொடர்பு கொண்டு படத்தின் கதையை கேட்டார். ஆனால் அதற்கு முன்பே நான் வேறு கதாநாயகனை தேர்ந்தெடுத்துவிட்டேன். ஆனாலும் கென்னடி என்கிற பெயரை வைத்துக்கொள்ள அவர் எந்த ஆட்சேப்பனையும் தெரிவிக்கவில்லை. நிச்சயமாக சீயானுடன் ஒரு படம் செய்யாமல் ரிட்டயர்ட் ஆக மாட்டேன்” என அனுராக் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பேர் போடலைனா என்ன? அவர்களுக்காக கண்டிப்பாக போவேன்! – எம்ஜிஆர் கலந்து கொண்ட அந்த விழா

Published by
Rajkumar

Recent Posts