வெற்றி மிதப்பில் மிதந்த நடிகருக்கு ஆப்பு வைத்த முருகதாஸ்… நிலைமை எப்போ வேணாலும் மாறலாம் சாரே…

Director A.R.Murugadass: தமிழ் திரையுலகில் கதாநாயகர்களுக்கிடையே உள்ள போட்டி என்பது எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது எதையும் நேரடியாக காட்டி கொள்ளாமல் தங்களது திரைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தி கொள்கின்றனர். அந்த வரிசையில் ஒரு காலத்தில் சூர்யாவிற்கும் விஜய்க்கும் இடையே மறைமுக போட்டி நடந்துள்ளது.
இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம்தான் அயன். இப்படம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது. இதனை தொடர்ந்து வந்த சிங்கம், 7ஆம் அறிவு போன்ற திரைப்படங்கள் சூர்யாவிற்கு வெற்றியை தேடி தந்தன.
இதையும் வாசிங்க:வளர்த்துவிட்ட இயக்குனரையே காலவாறிய வடிவேலு… பின்ன சாபம் சும்மா விடுமா?…
இயக்குனர் கே.வி.ஆனந்துக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் இடையே சில மனகசப்பு இருந்து வந்தது. முருகதாஸ் அச்சமயத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தை இயக்கி வந்தார். அதே சமயம் கே.வி.ஆனந்த் மாற்றான் திரைப்படத்தை இயக்கி வந்தார்.
சூர்யாவின் தொடர் வெற்றியினால் ஏ.ஆர்.முருகதாஸை பழி வாங்கும் எண்ணத்தில் மாற்றான் திரைப்படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த். சூர்யாவிற்குமே அந்த சமயத்தில் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக ஆகிவிடுவோம் எனும் எண்ணம் இருந்தது. அதே சமயம் அந்த நேரத்தில் அஜித் விஜய்யின் படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை.
இதையும் வாசிங்க:வாயாலேயே வட சுடுறத விட்டு செயல்ல காட்டுங்க! ‘லியோ’ படத்துக்கு தயாரிப்பாளர் விடுத்த சேலஞ்ச்
மாற்றான், துப்பாக்கி ரிலீஸ் ஆனபின் மாற்றான் பெரிய தோல்வியை சந்தித்தது. அதே சமயம் விஜய்யின் துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது. இவ்வாறாக முருகதாஸ் கே.வி.ஆனந்துக்கு சரியான பாடம் புகட்டினார். பின் வெற்றி களிப்பில் இருந்த சூர்யாவிற்கும் இது ஒரு பாடமாக அமைந்தது.
மேலும் இயக்குனர் பாலா சூர்யாவிடம் ஒரு முறை நீ யாரிடமும் போட்டி போடாதே உனக்கான பாதையை நீ உருவாக்கு என கூறியுள்ளார். ஆனால் இயக்குனர் பாலா சூர்யாவிற்கு கூறிய பாடம் மூலம் சூர்யா தனக்கென தனி பாதையை உருவாக்கி வெற்றி கண்டு வருகிறார்.
இதையும் வாசிங்க:விஜய் வெறித்தனமா ரசித்து கேட்கும் பாடல்களின் லிஸ்ட்!. அட அந்த ஹீரோ கூட இருக்காரே!…