குதிரைக்கு பெயிண்ட் அடிச்சி கிளைமேக்ஸ்... இந்த படத்துல இவ்வளவு நடந்துச்சா!..
விஜயகாந்த் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடித்த சிறந்த படங்களில் ஒன்று ஊமை விழிகள். இப்படத்தை அமிர்தராஜ் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் 1986ம் ஆண்டு வெளியானது. சஸ்பென்ஸ் திரில்லராக வெளிவந்த இப்படம் ரசிகர்களை பயமுறுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.
திரைப்பட கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து இப்படத்தை உருவாக்கியிருந்தனர். கதை,திரைக்கதை, வசனம்,நடிப்பு, இசை என அனைத்திலும் அசாத்திய உழைப்பை கொடுத்திருந்தனர். இப்படத்தை ஆபாவாணன் தயாரித்திருந்தார். மனோஜ் கியான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
அருண்பாண்டியன், சந்திரசேகர், ஜெய் சங்கர், ரவிச்சந்திரன், இளவரசி, சரிதா, செந்தில், மலேசிய வாசுதேவன் என பலரும் நடித்த இப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இப்படத்தின் விஜயகாந்த் நடித்த உழவன் மகன் படத்தை இயக்கியிருந்தார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் ஊமை விழிகள் படம் பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அமிர்தராஜ் ‘இப்படத்திற்கு விஜயகாந்த் சார் அளித்த ஆதரவு மறக்கமுடியாதது. நாங்கள் புதியவர்கள் என்றாலும் எங்களை நம்பி நடிக்க வந்தார். இப்படத்திற்காக ஒவ்வொரு நடிகராக தேடிப்பிடித்து அவர்களிடம் பேசி சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தோம். இப்படத்திற்கான கிளைமேக்ஸ் திடீரென எடுக்க வேண்டியிருந்தது. ஏனெனில், அந்த காட்சியில் நடிக்கும் நடிகர்களின் கால்ஷிட் மொத்தமாக கிடைப்பது சாதாரண விஷயம் இல்லை.
ஆனால், அப்போது எங்களிடம் குதிரை இல்லை. கமல்ஹாசன் ஒரு படப்பிடிப்புக்காக எல்லா குதிரைகளையும் ஹைதராபாத் கொன்று சென்றுவிட்டார். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போதுதான் கடற்கரையில் ஒரு வெள்ளை குதிரையை பார்த்தோம். அந்த குதிரைக்கு வண்டி இழுத்து பயிற்சி இல்லை என அதன் உரிமையாளர் கூறினார். எனவே, ஒரு நாள் அதற்கு பயிற்சி கொடுத்தோம். படப்பிடிப்பின் போது அந்த குதிரைக்கு பெயிண்ட் அடித்து அதன் நிறத்தை மாற்றித்தான் படப்பிடிப்பை நடத்தினோம்’ என அரவிந்த்ராஜ் அந்த பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்காததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா!! என்னப்பா சொல்றீங்க??