ஒன்னு இதுல இரு.. இல்ல அதுல இரு...புளூ சட்ட மாறனுக்கு செக்...
விமர்சனம் என்கிற பெயரில் புதிய திரைப்படங்களை தாறுமாறாக கிழித்து தொங்க போடுபவர் மாறன். தமிழ் டாக்கிஸ் என்கிற யுடியூப் சேனலில் இவர் திரைப்படங்களை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார். வழக்கமாக தமிழ் சினிமாவில் இடம் பெறும் மசாலாக்கள், அபத்தங்கள், ஒரே மாதிரியான காட்சிகள், வலுவில்லாத திரைக்கதைகள் ஆகியவற்றை செமயாக நக்கலடிப்பார்.
சில இயக்குனர்கள் இவர் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர். மேலும், எங்கள் படங்களை இப்படி கிண்டலடிக்கிறாயே உன்னால் முடிந்தால் ஒரு படத்தை எடுத்துக்காட்டு என பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மாறனிடம் சவால் விட்டனர்.
அந்த சவாலை ஏற்ற மாறன் ‘ஆண்டி இண்டியன்’ என்கிற படத்தை இயக்கினார். மதம் எந்த அளவுக்கு மனிதர்களை அழிக்கிறது என்பதை தனது படைப்பில் காட்சிகளாகவும் உரையாடல்கள் மூலமாகவும் இப்படத்தில் உணர்த்தினார் மாறன். இப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது. அதோடு, சிறப்பாக இருப்பதாக பாரதிராஜா உள்ளிட்ட பல இயக்குனர்களும் பாராட்டியுள்ளனர்.
புளூசட்ட மாறன் பல வருடங்களாக இயக்குனர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார். உறுப்பினராக இருந்து கொண்டே ஒருபக்கம் புதிய படங்களை அவர் கண்டமேனிக்கு விமர்சனம் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாத சில இயக்குனர்கள் இதுபற்றி இயக்குனர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் புகார் கூறினார். இதையடுத்து ‘திரைப்படங்களை தரக்குறைவாக விமர்சிப்பதை புளூசட்ட மாறன் தொடர்ந்தால் அவர் இயக்குனர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்’ என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதாவது, யுடியூப்பில் விமர்சனம் செய்தால் படங்களை இயக்கக் கூடாது. படங்களை இயக்குவதாக இருந்தால் யுடியூப்பில் கண்டமேனிக்கு விமர்சனம் செய்யக்கூடாது என இயக்குனர் சங்கம் அவருக்கு செக் வைத்துள்ளது.
புளூசட்ட மாறன் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!.