Connect with us
atlee

Cinema News

10 ஆயிரம் ஸ்கொயர் ஃபீட்.. 40 கோடியில் பங்களா!.. சொல்லி அடித்த அட்லீ!..

Director Atlee: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியிருக்கிறார் இயக்குனர் அட்லீ. ஆரம்பகாலத்தில் சங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ அதன் பிறகு ராஜாராணியின் மூலம் முதன் முதலில் தன் இயக்குனர் அறிமுகத்தை பதிவு செய்தார் என அனைவருக்கும் தெரியும்.

ஒரு சாதாரண இயக்குனராக இருந்தவர் இன்று இந்திய அளவில் பேசப்பட்ட இயக்குனராக மாறியிருக்கிறார் என்றால் அவருக்குள் இருந்த எதிர்மறையான எண்ணம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. நடிகர்களை வைத்து படம் எடுக்கும் போது  முன்பு அட்லீ ஒரு நாள் நான் 100 கோடி சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறுவேன் என்று அடிக்கடி சொல்வாராம்.

இதையும் படிங்க: நயன் சம்பளத்தில் 10 சதவீதம் கூட வசூலிக்காத அன்னப்பூரணி!.. இதுல லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் வேணுமாம்!..

அதை இன்று நிரூபித்திருக்கிறார். ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற மிகப்பெரிய பேன் இந்தியா படத்தை கொடுத்து அதை 1000 கோடி வரை பட்ஜெட்டிலும் கொண்டு நிறுத்தியிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமா?

அதுவும் கோலிவுட்டில் இருந்து ஒரு இயக்குனர் இந்தளவுக்கு பாலிவுட்டில் பெருமை சேர்த்திருக்கிறார். இதனால் அவருடைய சம்பளம் 50 கோடியையும் தாண்டி போய்க் கொண்டிருக்கின்றது. மீண்டும் ஷாரூக்கானை வைத்தும் விஜயை வைத்து இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறார் என்ற ஒரு தகவலும் வந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: இது கன்பார்ம்!..தளபதி68 பட டைட்டில் இதுதான்.. கமலுக்கு செம டஃபா இருக்குமே!…

இதை அட்லீயே ஒரு மேடையில் அவர்களுக்காக ஒரு கதையும் ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருந்தார். இப்படி அடுத்தடுத்த படங்களால் 100 கோடி வரை சம்பளம் பெறும் இயக்குனராக மாறும் அட்லி தன்னுடைய எல்லையையும் விரிவுபடுத்த வேண்டிய சூழலில்தான் இருக்கிறார்.

அதனால் மும்பையில் ஒரு அலுவலகம் அமைக்க திட்டமிட்டிருக்கிறாராம். 1000 சதுர அடியில் 40 கோடி செலவில் ஒரு பெரிய அலுவலகம் அமைக்க இருப்பதாகவும் அதற்கான வேலைகளில்தான் இப்போது அட்லீ இறங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: பாதி முடிந்து படம் டிராப்! வேறு படமா வந்து சூப்பர் ஹிட் அடித்த சூப்பர் ஸ்டார் படம்!….

google news
Continue Reading

More in Cinema News

To Top