Connect with us
atlee

Cinema News

ஃபர்ஸ்ட் மீட்டிங்கில் அட்லியை பங்கமாக கலாய்த்த அஜித்!.. அட ஒரே பப்பி ஷேமா போச்சே!..

Actor atlee: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக வேலை செய்தவர் அட்லீ. நண்பன் படத்தில் வேலை செய்த போது விஜயின் அறிமுகமும் அவருக்கு கிடைத்தது. அதன்பின் ராஜா ராணி என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஆர்யாவும், நயன்தாராவும் நடித்திருந்தனர்.

மௌன ராகம் படத்தின் உல்டாதான் என்றாலும் படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது. அதன்பின் விஜயை வைத்து தெறி படத்தை இயக்கினார். விஜயகாந்தின் சத்ரியன் படத்தின் உல்ட்டாவாக அப்படம் உருவானது. அதேபோல், கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தை சுட்டு மெர்சல் படத்தை எடுத்தார்.

இதையும் படிங்க: அட்லி எல்லாம் இப்போ தான்!.. அந்த காலத்துலயே விஜய்யை எப்படி ஏமாத்திருக்காங்க பாருங்க!..

அதேபோல் மீண்டும் விஜயை வைத்து பிகில் படத்தை இயக்கினார். ஷங்கரை போலவே அதிக பட்ஜெட்டுகளில் படமெடுத்து தயாரிப்பாளர்களை கதறவிடும் இயக்குனர் இவர். பிகில் படத்திற்கு பின் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு கிடைக்க மும்பைக்கு போனார்.

அப்படி வெளியான ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த ஹிந்தி படமும் இவ்வளவு வசுலை பெற்றதில்லை. எனவே, பேன் இண்டியா அளவில் பெரிய இயக்குனராக மாறியிருக்கிறார். அடுத்து ஷாருக்கான், கமல் ஆகியோரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.

இதையும் படிங்க: டீசர்ல கிரிக்கெட்ட திட்டிட்டு மேட்ச் பாக்க போயிட்டார் தலீவர்!. ரஜினியை கலாய்க்கும் பிரபலம்…

விஜயை வைத்து 3 படங்களை இயக்கிவிட்டாலும் அஜித்தை வைத்து அட்லி இதுவரை படம் இயக்கியதில்லை. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அட்லீ ‘நான் ராஜா ராணி படத்தை இயக்கிய போது அப்படத்தில் நடித்த நயன்தாரா அஜித் சார் நடித்துவந்த ஆரம்பம் படத்திலும் நடித்து வந்தார். அப்போது அஜித் சாரை சந்தித்தேன்.

என்னை பார்த்தவுடன் ‘ஸ்கூல் முடிச்சிட்டீங்களா?’ என கேட்டு சிரித்தார். அதேபோல், நான் கஷ்டப்பட்டபோதும் என்னுடன் அக்கறையாக பேசியவர் அவர். அவருக்காக ஒரு சூப்பரான கதையை உருவாக்கி வைத்துள்ளேன். அவர் எப்போது சரி என சொன்னாலும் அவரை இயக்குவேன்’ எனவும் அட்லீ கூறியிருந்தார்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top