Cinema News
நான் எவ்ளோ ரிஸ்க் எடுக்கிறேன் தெரியுமா?.. ஏன் திட்றீங்க?!.. பொங்கும் அட்லீ!..
விஜயை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்கிய இயக்குனராக ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் இந்த அட்லீ. அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய ஷங்கரின் சிஷ்யர்களில் ஒருவர். ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் வேலை பார்த்த அட்லீ ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார்.
முதல் படமே வெற்றி. ராஜா ராணி படம் விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது. அதோடு, நண்பன் படத்தில் நடிக்கும்போது அட்லி வேலை செய்யும் விதத்தை பார்த்து அப்போதே அவரிடம் ‘நல்ல கதை இருந்தா என்கிட்ட வா.. படம் பண்ணலாம்’ என அவரிடம் சொன்னவர்தான் விஜய். ராஜா ராணிக்கு பின் விஜயை வைத்து தெறி படத்தை இயக்கினார்.
இதையும் படிங்க: நானும் எவ்ளோ நாள்தான் காத்திருக்கிறது? ‘தனி ஒருவன் 2’ வால் அண்ணனுக்கு நேர்ந்த கதி
அதன்பின் தொடர்ந்து விஜயை வைத்து மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். அடுத்து அப்படியே பாலிவுட் பக்கம் போய் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். திரையுலகில் அட்லி பல கோடி சம்பளம் வாங்கும் பெரிய இயக்குனராக இருக்கிறார்.
அதேநேரம், ஏற்கனவே வெற்றி பெற்ற திரைப்படங்களின் கதையை கொஞ்சம் மாற்றி படமாக அட்லீ எடுக்கிறார் என்கிற புகார் பல வருடங்களாக அவரை துரத்தி வருகிறது. ஆனால், அதற்கெல்லாம் அட்லீ பதில் சொல்வதில்லை. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அட்லீ பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: வெற்றிமாறனுடன் இணையும் அஜித்?.. இவ்ளோ ஷாக் கொடுத்த தாங்கமாட்டாங்க ஃபேன்ஸ்!…
நான் கதையில் பெரிய ரிஸ்க் எடுக்கிறேன். ராஜா ராணி முடிந்ததும் என்னால் விஜயை வைத்து ஒரு காதல் படத்தை எடுத்திருக்க முடியும். ஆனால், அவரை ஒரு போலீஸ் அதிகாரியாக காட்ட வேண்டும் என ரிஸ்க் எடுத்தேன். அடுத்து ஒரு கிராமத்து கதையில் அவரை காட்ட நினைத்தேன். 6 வயது பையனுக்கு அப்பா என அவரை நடிக்க வைத்தேன். தெறி படத்தின் அறிமுக காட்சியில் ‘நீ மொக்க பேபி’ என அவரின் குழந்தை சொல்லும். இதை நீங்கள் மற்ற விஜய் படங்களில் பார்க்க முடியாது.
அடுத்து விஜய் அண்ணாவை வைத்து ஒரு விளையாட்டு தொடர்பான படத்தை எடுக்க நினைத்தேன். பிகில் படத்தை எடுத்தேன். ஷாருக்கானை வைத்து காதல் படத்தை எடுத்தால் படம் பிச்சிக்கிட்டு ஓடும். ஆனால், அவரை மாஸ் ஹீரோவாக காட்ட முடிவெடுத்தேன். இப்படி பல ரிஸ்க்குகளை எடுத்துதான் படங்களை இயக்கி வருகிறேன். ஆனால், எனக்கு சில எல்லைகள் இருக்கிறது. அதை தாண்டி போக முடியாது’ என அட்லீ பேசியிருந்தார்.
இதையும் படிங்க: இத்தனை குறள் படித்தவருக்கு இந்த குரல் கேக்கலயா? மான நஷ்ட வழக்கு போடப் போகும் அமீர்