தமிழ் சினிமாவில் பல தரமான தமிழ் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர்கள் எப்போதும் தங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்று அவசர அவசரமாக படத்தை எடுத்து முடிக்க மாட்டார்கள். தங்கள் நினைத்த காட்சிகள் வரும் வரையில் அதற்காக காத்திருந்து படத்தை எடுத்து முடிப்பார்கள்.
அதற்கு தற்காலத்து சிறந்த உதாரணம் இயக்குனர் வெற்றிமாறன். குறுகியகால படைப்பாக தொடங்கப்பட்ட விடுதலை தற்போது வருடக்கணக்காக சூட்டிங் நடந்து வருகிறது. அதேபோல், தான் விரும்பிய காட்சி தான் எழுதப்பட்டது போல் வரவேண்டும் என்று மெனக்கெட்டு ஷூட்டிங் நடத்துபவர் இயக்குனர் பாலா.
ஏன் படத்தின் முக்கால்வாசி ஷூட்டிங் முடிந்த பிறகும் படத்தின் ஷூட்டிங்கை முதலில் இருந்து ஆரம்பித்து விடுவார் என்று கூட கூறுவார்கள். இவர் முதல் படம் சேது மிகப்பெரிய வெற்றியை அடைந்ததை அடுத்து, இரண்டாவதாக நந்தா எனும் திரைப்படத்தை இயக்க ஆரம்பித்தார்.
இதையும் படியுங்களேன் – குத்தி கொடூரமாக கொன்ற விஜய் சேதுபதி.! 10 இடங்களை வெட்டி வீசிய சென்சார் குழு.! அப்செட்டில் உலகநாயகன்.!
இந்த திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் வெகுநாட்களாக நீண்டுகொண்டே சென்றதாம், இதனை கவனித்த அப்பட தயாரிப்பாளர் பாலாவின் அனுமதியின்றியே, நந்தா படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி என விளம்பரம் பத்திரிக்கைகளில் தகவல் கொடுத்து விட்டாராம்.
அதற்குப் பிறகு தெரிந்து கொண்ட பாலா, தீபாவளிக்கு முன்னதாக விரைவாக படத்தை முடித்து கொடுக்க வேண்டுமென்ற கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுவிட்டதாம். அதன்பிறகு படத்தை விரைவில் முடித்து நவம்பர் 14 2002 ஆம் ஆண்டு நந்தா திரைப்படத்தை திரைக்கு கொண்டு வந்தார் இயக்குனர் பாலா. இந்த தகவலை அண்மையில் ஒரு முன்னணி மூத்த பத்திரிகையாளர் வீடியோவில் தெரிவித்து இருந்தார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…