உண்மையில் இதுதான் நடந்தது....குழம்பிய பாலா....! படப்பிடிப்பு தள்ளிவைத்த படக்குழு...
தமிழ் சினிமாவில் பாதாள நிலையில் இருந்த நடிகர் சூர்யாவை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்த பெருமை இயக்குனர் பாலாவை சேரும். நந்தா என்ற படத்தின் மூலம் மீண்டும் ஒரு புத்துணர்ச்சியை சூர்யாவிற்கு ஊட்டியவர் பாலா. படம் வேற லெவல் ஹிட். யாரும் எதிர்பார்க்காத சூர்யாவை அன்று அனைவரும் கொண்டாட ஆரம்பித்தனர். நந்தா படத்திற்கு பிறகு தான் ஏராளமான பட வாய்ப்புகள அவரை தேடி வந்தது.
நந்தா படத்திற்கு பிறகு அதே பாலா இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து பிதாமகன் என்ற ஒரு காவியத்தை படைத்தார் பாலா. அந்த படமும் பெரிய அளவில் ஹிட். கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து மீண்டும் சூர்யா-பாலா இணைவது குறித்து சூர்யாவே ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் என் தந்தையும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றெல்லாம் கூறினார். படத்தின் பூஜை கன்னியாகுமரியில் போட்டு படத்தை ஆரம்பித்தனர்.
ஆனால் படப்பிடிப்பு ஆரம்பமானது முதலே ஏராளமான மனக்கசப்புகள் வந்த வண்ணம் இருந்தன. சூர்யாவிற்கும் பாலாவிற்கு இடையே மோதல் முற்றியது என்றெல்லாம் பேச்சு வந்தது. இதனால் முதல் கட்ட படப்பிடிப்பு அப்படியே நின்று போனது.பின் இருவரும் சமரசம் பேசி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் ஆரம்பித்தனர். இதில் பாலா எடுத்த ஷார்ட்டை மாறி மாறி எடுத்து வருகிறார் என்று படக்குழுவில் இருந்து தகவல் வெளியானது.
ஆனாலும் சில பேர் அவருக்கு திருப்தி ஆகிற வரைக்கும் இப்படி தான் பண்ணுவார் என சகித்து கொண்டிருந்தனர். ஆனாலும் முதல் நாள் எடுத்த ஷார்ட்டை மறு நாளும் முதலில் இருந்து எடுக்க சொல்கிறாராம். இதனால் கடுப்பாகி போன படக்குழு முதலில் ஸ்கிர்ப்டில் உள்ளதை கதைக்கு ஏற்றவாறு செதுக்கியபிறகு படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று கூறி தற்போதைக்கு படப்பிடிப்பை ரத்து செய்துள்ளதாம்.