இதனாலதான் விஜய் எப்பவும் ரெடியா இருக்காரு!...அட்லியிடம் கத்துக்குங்க பாலா!...

பாலா என்றால் அவர் இயக்கும் படங்களில் படப்பிடிப்பு பல நாட்கள் நடக்கும். ஒரு காட்சியை 20 முறைக்கு மேல் எடுத்து நடிகர்களை சாறு புளிந்து விடுவார். இதனாலேயே அவர் படத்தில் நடிக்கும் நடிகர்கள் எப்போது படப்பிடிப்பு முடியும் என வெறித்தனமாக எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
ஒருபக்கம், நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்புக்காக காத்திருக்கும்போது ‘எனக்கு இன்னைக்கு மூட் இல்ல’ எனக்கூறிவிட்டு சென்றுவிடுவார். நான் கடவுள் பட படப்பிடிப்பின் போது ஆர்யா அப்படித்தான் பாலாவிடம் சிக்கி படாதபாடு பட்டார்.
தற்போது அவர் இயக்கத்தில் எந்த நடிகரும் நடிக்க முன்வராத நிலையில், சூர்யா அவருக்கு கை கொடுத்தார். இருவரும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கன்னியாகுமாரியில் துவங்கியது.
ஆனால், கதாநாயகியை சூர்யா துரத்துவது போன்ற காட்சியை பாலா திரும்ப திரும்ப எடுக்க கடுப்பான சூர்யா அங்கிருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டார்.தற்போது சிலர் சமாதானம் செய்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் இதுவரை தெறி, மெர்சல், பிகில் 3 திரைப்படங்களில் நடித்துள்ளார். எப்போதும் அட்லி அழைத்தாலும் விஜய் ஓகே சொல்வார். அதற்கு காரணம் இருக்கிறது. படப்பிடிப்பில் விஜய் நடந்து வரும் காட்சி எனில் சுற்றி பல கேமராக்களில் அவரை படம் பிடிப்பாராம் அட்லீ. அதில், தேவையானவற்றை எடுத்து கொள்வாராம்.
எனவே, ‘மீண்டும் ஒரு முறை நடந்து வாருங்கள்’ என கூறவே மாட்டாராம் அட்லி. அதாவது ரீடேக் கேட்கவே மாட்டாரம். இது விஜய் போன்ற நடிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதானல்தான் ஷாருக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லியை தேடி வந்தது.
ஆனால், பாலாவோ தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்திருக்கும் இந்த காலத்திலும் இன்னும் பழைய மாதிரியே படம் எடுத்து வருகிறார் என சினிமா வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.