கிராமமெல்லாம் வேஸ்ட்.! கோவா தான் பெஸ்ட்.! சூர்யா, இது ஆகுற மாதிரி தெரியல.!
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் போன்ற பல தரமான படைப்புகளை இயக்கியவர் இயக்குனர் பாலா. இவரது இயக்கத்தில் கடைசியாக பரதேசி திரைப்படம் நன்றாக அமைந்தது. அதன் பிறகு வெளியான தாரைதப்பட்டை, வர்மா, நாச்சியார் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. எதிர்மறை விமர்சனங்களை அதிகமாக எதிர்கொண்டன.
இதன் காரணமாக தற்போது மீண்டும் தனது பழைய நிலைக்கு வர எண்ணிய பாலா, தற்போது ஒரு தரமான கதையை சூர்யாவிடம் கூறி அதனை ஓகே செய்து, தற்போது அதற்கான பட வேலைகளில் பிசியாக களம் இறங்கியுள்ளன.
வழக்கமாக பாலா படம் என்றால் கிராமத்து பின்னணியில், அதன் நேட்டிவிட்டி மாறாமல், வெள்ளையாக இருக்கும் ஹீரோயினை கூட படத்தின் கதையோட்டத்திற்காக கிராமத்து பெண்மணிபோல காட்டி, இது அக்மார்க் பாலாவின் திரைப்படம் எனும் அளவிற்கு இயக்கி இருப்பார்.
இதையும் படியுங்களேன் - இந்த வசனத்த நான் பேசவே மாட்டேன்.! அடம்பிடித்த வடிவேலு.!
ஆனால், தற்போது கிடைத்த தகவலின்படி இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் மதுரையிலும், இரண்டாம் கட்ட ஷூட்டிங் கோவாவிலும் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாலாவும் தற்போதைய டிரெண்டிற்கு ஏற்றவாறு தனது சாயலை மாற்றி கோவா பக்கம் போய் உள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. பார்க்கலாம் இந்த படத்தில் என்ன செய்ய காத்திருக்கிறார் என்று.