கொஞ்சம் கூட கூச்சப்படாமல் வெளிப்படையாய் பேசிய பாலா.! எனக்கே பாடம் எடுக்குறாங்க.!
பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு பழக்கமுண்டு. பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் என்றால் அதனை அப்படியே மெயின்டைன் செய்து கொள்வார்கள். சிலர் தன்னுடைய உதவியாளர்களை வைத்து கதை திரைக்கதை பணிகளை மேற்கொள்வார்கள். ஆனால் திரைப்படத்தில் போட்டு கொள்ளும்போது கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் என்ன போட்டு கொள்வார்கள்.
சிலர் மட்டுமே அதற்கு விதிவிலக்கு. தனது உதவியலார்களிடம் இருந்து ஏதேனும் கற்றுக்கொண்டால் வெளியில் சொல்லிவிடுவார்கள். மற்றபடி பெரும்பாலான இயக்குனர்கள் அப்படித்தான் செய்வார்கள் மேலும், தன்னுடைய உதவி இயக்குனர்களிடமிருந்து கிடைத்த தகவல்களை வெளியில் வெளிப்படையாக கூற மாட்டார்கள்.
ஆனால், இயக்குனர் பாலா அதற்கு அப்படியே எதிர்மாறானவர். தனக்கு மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசிவிடுவார். இவரிடம் பரதேசி படம் நேரத்தில் உதவி இயக்குனராக சுதா கொங்கரா பணியாற்றினார். அதன்பின்னர், சுதா கொங்காரா இறுதிச்சுற்று எனும் திரைப்படத்தை இயக்கினார்.
இதையும் படியுங்களேன் - நன்றி சொன்னா கெட்ட கெட்ட வார்தைலேயே திட்டுவான்.! வருத்தப்பட்ட பிரபல நடிகர்.!
அந்த படத்தை பார்த்த சுதா கொங்கராவின் குருவான பாலா மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார். அப்படம் பற்றி மேலும், பேசுகையில், இறுதி சுற்று திரைப்படம் பார்த்து அந்த பெண்ணிடம் இருந்து நிறைய கற்று கொண்டேன். ராதாரவி மற்றும் மாதவன் இடையிலான உறவு பற்றி இறுதிக்காட்சியின் முந்தைய காட்சியில் தான் எளிதாக ரசிகர்களுக்கு புரியும்படி சொல்லியிருப்பார். அந்த மாதிரியாக 5,6 விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். ஒரு கதாபாத்திரத்தை எப்படி வடிவமைக்க வேண்டும் என்ற விஷயங்கள் பற்றி நான் சுதா கொங்கராவிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என வெளிப்படையாக பேசினார்.
பிரபல இயக்குனர் தனது உதவி இயக்குனர்களிடம் இருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டேன் என கூறுவதற்கு கூச்சப்படுவர். ஆனால், இயக்குனர் பாலா அதனை அப்படி எடுத்து கொள்ளாமல் தான் இன்னும் கற்று கொண்டிருக்கிறேன் என்பதை வெளிப்படையாக பேசினார்.