பாலாவின் முதல் காதல்!.. எல்லாம் அந்த நடிகைதான் காரணம்.. என்னாச்சுனு தெரியுமா?..

by Rohini |   ( Updated:2023-05-06 14:22:02  )
bala
X

bala

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பாலா. இயக்குனராக மட்டுமல்லாமல் வசனகர்த்தாவாகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் .தமிழ் சினிமாவில் ஒரு புரட்சிகரமான படத்தை எடுப்பதில் பாலா மிகவும் குறிப்பிடத்தக்கவர்.

மிகவும் தனித்துவமான மனிதர். தமிழ் சினிமாவின் பலதரப்பட்ட குணாதிசயங்களை இவர் மாற்றிய முறை மிகவும் பாராட்டுக்குரியது. இன்று எத்தனையோ புதிய தலைமுறை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வந்தாலும் அவர்களில் பாலாவின் கண்ணோட்டமும் அணுகுமுறையும் வித்தியாசமாகவே இருக்கின்றது.

ஆரம்பகால பாலாவின் வாழ்க்கையை புரட்டிப் பார்த்தால் மிகவும் கரடு முரடானதாகவே இருக்கும். பள்ளி கல்லூரிகளில் படித்தாலும் படிப்பு என்பது அவருக்கு மிகவும் எட்டாத கனியாகவே இருந்திருக்கிறது. அதாவது சிறு வயதில் என்னென்ன கெட்ட பழக்கங்கள் இருக்குமோ அது எல்லாவற்றிலும் பாலா முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டாராம்.

மேலும் பாலாவிற்கு சினிமா பார்ப்பது என்பது மிகவும் பிடிக்குமாம். அவர் சிறு வயதில் இருக்கும்போதே நடிகை பத்மினியின் படங்கள் என்றால் மிகவும் விரும்பி பார்ப்பாராம். பத்மினியின் மீது அதீத காதலும் அன்பும் கொண்ட ஒரு ரசிகராகவே பாலா இருந்திருக்கிறார்.

அதிலும் குறிப்பாக பத்மினியின் மூக்கு அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாம். அதனாலையே கல்லூரி படிக்கும் போது பத்மினியின் மூக்கு இருக்கிற மாதிரியான ஒரு பெண்ணை காதலிக்க தொடங்கினாராம். ஆனால் அந்தப் பெண்ணிற்கு பாலாவின் மீது எந்த ஒரு காதல் விருப்பமும் இல்லையாம். அதனால் அந்த காதல் கைவிடப்பட்டது என இந்த பதிவை கூறிய சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியின் போது தெரிவித்தார்.

Next Story