பாலாவிடம் செமத்தியா அடிவாங்கிய ஹீரோயின்கள்... அடக்கடவுளே இவ்ளோ கஷ்டப்பட்டாங்களா?
அந்தக்காலத்தில் மோதிரவிரலால் குட்டுப்பட்டால் தான் நல்லா நடிக்க வரும்னு இயக்குனர் சிகரம் பாலசந்தரைப் பற்றிச் சொல்வார்கள். அதே போல பாரதிராஜாவும் ஒண்ணுமே தெரியாத நடிகராக இருந்தாலும் அவரிடம் இருந்து தனக்குத் தேவையான நடிப்பை உறிஞ்சி விடுவார். அந்த வகையில் இயக்குனர் பாலாவையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இவரது படங்களில் நடிப்பது என்றாலே பல நடிகர், நடிகைகள் பயப்படுவார்கள். ஏன்னா தன்னை அந்தக் கதாபாத்திரத்திற்கே அர்ப்பணிக்க வேண்டி வரும். அதற்காக எவ்வளவு வலிகளையும் தாங்கிக் கொள்ள வேண்டும். அதே நேரம் அவர்களது நடிப்பு பிரபலமாகி விடும். இதற்கு ஒப்புக்கொள்பவர்கள் தான் அவரது படங்களில் நடிப்பார்கள்.
நிஜ வாழ்வில் மனிதர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை அப்படியே கொண்டு வருபவர் இயக்குனர் பாலா. தனது படைப்பிற்கு எந்த ஒரு பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக நடிகர்களிடமும் சரி. திரைக்கதையிலும் சரி. கறாராகவே இருப்பாராம்.
நடிகர், நடிகைகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வைக்க எந்த ஒரு எல்லைக்கும் போகத் தயங்க மாட்டார். அவரிடம் சிக்கிய 6 நடிகைகளைப் பார்ப்போம்.
நான் கடவுள் படத்தில் பூஜா ஸ்பெஷல் மேக்கப் போட்டு அசல் பிச்சைக்காரியைப் போலவே நடித்தார். இது காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது. இந்தப்படத்திற்காக ரொம்பவே கஷ்டப்பட்டாலும் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நல்ல பெயர் வாங்கிவிட்டார்.
லைலா
இயக்குனர் பாலாவின் படைப்பில் நந்தா, பிதாமகன் படங்களில் நடித்து அசத்தினார். பிதாமகனில் சூர்யாவைத் துரத்த லைலாவை பாலா நல்லா ஓடவிட்டாராம்.
வேதிகா
பாலாவின் பரதேசி படத்தில் நடித்தவர் வேதிகா. தனக்கு ஒரு பிரேக் வேணும்னே வேதிகா இந்தப் படத்தில் நடித்தாராம். படத்தில் பஞ்சத்தைக் கண் முன் நிறுத்த பாலாவிடம் நிஜமாகவே அடிவாங்கி வேதனைப்பட்டார்களாம்.
வரலட்சுமி
தாரை தப்பட்டை படத்தில் பல இடங்களில் வரலட்சுமி அடிவாங்கி இருப்பார். படத்தில் ஆர்.கே.சுரேஷ் வரலட்சுமியை முதலில் மெதுவாகவே அடித்தாராம். பின்னர் பாலாவின் திட்டுக்குப் பயந்து வேகமாக அடித்துவிட்டாராம். அதில் நெஞ்சில் ஏறி மிதித்து எலும்பில் கிராக் விழுந்துவிட்டதாம். அதுமட்டுமல்லாமல் ஒரு காட்சியில் கண்ணாடி குத்தி வரலட்சுமிக்கு தையல் போடப்பட்டதாம்.
மமிதா பைஜே
வணங்கான் படத்தில் நடிகை மமிதா பைஜே. இவர் கேரளத்து வரவு. சூட்டிங்கில் நடிகையைத் தோளில் தட்டினாராம் பாலா. அதன்பிறகு தான் அவரது திறமை தெரிந்த நடிகைக்கு தன்னை வழிநடத்தவே அவ்வாறு செய்துள்ளார் என்று புரிந்து கொண்டாராம்.