நடிகைகிட்ட பேசினதால ரூம்ல என்ன வச்சி பூட்டிட்டார் பாக்கியராஜ்!. பகீர் தகவலை சொன்ன பிரபலம்!..
ரசிகர்கள் திரையில் பார்க்கும் சினிமாவை உருவாக்கும்போது பல விஷயங்கள் நடக்கும். அது இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு மட்டுமே தெரியும். ஒரு திரைப்படம் உருவாவதற்கு பின் பல காத்திருப்புகள், துரோகங்கள், சண்டைகள், மோதல்கள், தோல்விகள் இருக்கிறது.
இது சம்பந்தப்பட்ட இயக்குனர் அல்லது உதவி இயக்குனர்கள் வெளியே சொன்னால் மட்டுமே தெரியும். தற்போது யுடியூப் சேனல்கள் அதிகரித்துவிட்டது. எனவே, ஒருவரை விடாமல் அழைத்து பேசும்போது பல தகவல்கள் வெளியே வருகிறது. அப்படி பாக்கியராஜ் நடந்து கொண்டது பற்றி இயக்குனர் ஒருவர் பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: நீங்க மாலை போட்டதுக்காக நாங்க என்ன சாமி படமா எடுக்க முடியும்? இளையராஜாவை சீண்டிய பாக்கியராஜ்
பாரதிராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்தான் பாக்கியராஜ். அவரால்தான் பாக்கியராஜ் நடிகராகவும் மாறினார். தன்னால் மாஸ் ஹீரோவாக முடியாது என்பதை தெரிந்து வைத்திருந்த அவர் தனது உருவத்திற்கு ஏற்ற கதைகளை உருவாக்கினார். அதோடு, சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து வெற்றியும் பெற்றார்.
பாக்கியராஜ் இயக்கி நடித்த இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், அந்த ஏழு நாட்கள் என பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, இவருக்கு பெண் ரசிகைகளும் உருவானார்கள். பாக்கியராஜ் எழுதி, இயக்கி நடித்த படங்களில் தூரல் நின்னு போச்சு படமும் ஒன்று.
இந்த படத்தில்தான் நடிகை சுலக்சனாவை அறிமுகம் செய்தார் பாக்கியராஜ். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் இப்படத்தில் உதவி இயக்குனராக வேலைசெய்த இயக்குனர் ஜி.எம்.குமார் பேசியபோது ‘ஏழெட்டு படங்களில் வேலை செய்தும் பாக்கியராஜ் என்னை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து செல்லவில்லை.
ஒருநாள் அவருக்கு தெரியாமல் தூரல் நின்னு போச்சி ஷூட்டிங்கு போய்விட்டேன். சுலக்சனாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதைப்பார்த்த பாக்கியராஜ் அங்கே சத்தம் போட்டு கத்தி என்னை திட்டினார். மேலும், என்னை இழுத்துகொண்டு போய் ஒரு அறையில் போட்டு அடைத்துவிட்டார்’ என சொல்லி இருக்கிறார்.
இந்த ஜி.எம்.குமார்தான் பின்னாளில் அறுவடை நாள், பிக்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் ஆகிய படங்களை இயக்கினார். மேலும், அவன் இவன், வெயில், மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.