Cinema History
ஹீரோவாக நடிக்க முடிவெடுத்ததும் பாக்கியராஜ் செய்த முதல் வேலை!. இப்படி யாருமே யோசிக்க மாட்டாங்க!..
Bhagyaraj: தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் என அழைக்கப்பட்டவர் கே.பாக்கியராஜ். பாரதிராஜாவிடம் பல உதவி இயக்குனர்கள் பணிபுரிந்திருந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்தவர் பாக்கியராஜுதான். கதை, திரைக்கதை, வசனம் எழுதவதில் கில்லாடி. பாரதிராஜாவுக்கே சில சமயம் குழப்பம் ஏற்பட்டால் அவர் ஆலோசிப்பது பாக்கியராஜிடம்தான்.
பாக்கியராஜ் கதை, திரைக்கதை எழுதி பாரதிராஜா இயக்கிய திரைப்படம்தான் ‘ஒரு கைதியின் டைரி’. தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்திக்கும் போய் திரைப்படங்களை பாக்கியராஜ் இயக்கினார். பல திரைப்படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவரின் பல திரைப்படங்கள் வெள்ளி விழா படங்களாக அமைந்தது.
இதையும் படிங்க: ஓடிடியே இத்தனை கோடியா?!. லியோவை ஓவர் டேக் செய்யும் கோட்!.. சம்பவம் செய்த வெங்கட்பிரபு..
பல திரைப்படங்கள் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக பாக்கியராஜ் இருந்தார். 80களில் மேட்டனி ஷோ என அழைக்கப்படும் மதிய காட்சிகளில் பெண்களின் கூட்டம் தியேட்டருக்கு போவதே பாக்கியராஜ் படங்களை பார்க்கத்தான். அப்படி பெண் ரசிகைகளை அவர் உருவாக்கி வைத்திருந்தார். எந்த நடிகரின் பாதிப்பும் இல்லாமல் ஒரு தனி பாணியை பாக்கியராஜ் கடை பிடித்ததே அதற்கு காரணம்.
பல ஹிட் படங்களில் நடித்த பாக்கியராஜுக்கு துவக்கத்தில் நடிப்பதில் பெரிய ஆர்வமெல்லாம் இருந்ததில்லை. அவரை கட்டாய்ப்படுத்தி பாரதிராஜா இயக்கிய படம்தான் புதிய வார்ப்புகள். ஆனால், இந்த படத்தில் நடித்தும் அவருக்கு நடிக்கும் ஆசை வரவில்லை. அந்த படத்திற்கு பின் ‘சுவரில்லா சித்திரங்கள்’ என்கிற ஒரு கதையை எழுதி இயக்கும் முயற்சியில் பாக்கியராஜ் ஈடுபட்டிருந்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கு எங்கயோ மச்சம்தான்!.. புடவையில் மனச கெடுக்கும் ‘கோட்’ பட நடிகை….
அப்படத்திற்கு வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைக்கும் முயற்சியில் இருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. அதன்பின் தானே அப்படத்தில் ஹீரோவாக நடிப்பது என அவர் முடிவெடுத்தார். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய பாக்கியராஜ் ‘நான் ஹீரோவாக நடிப்பது என முடிவானதும் ஒரு காகித்தை எடுத்து முதலில் என் குறைகளை எழுதினேன். அதன்பின் என் நிறைகளை எழுதினேன். அதற்கு ஏற்றதுபோல் திரைக்கதையையும், காட்சியையும் அமைத்தேன்.
என் குறைகளை தெரிந்துகொள்ளாமல் நான் நடிக்க வந்திருந்தால் இவ்வளவு வெற்றிப்படங்களை நான் கொடுத்திருக்க வாய்ப்பில்லை என பாக்கியராஜ் கூறியிருந்தார். பாக்கியராஜ் இப்படி புத்திசாலித்தனமாக யோசித்ததால்தான் அவரால் பல வெற்றிப்படங்களில் நடிக்க முடிந்திருக்கிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், சிம்புவுக்கு தான் கடைசி!.. இனி யாருக்கும் வாய்ப்பு இல்ல.. கமலின் அதிரடி முடிவு!..