ரயிலுக்கு நேரமாச்சு, தொட்டில் சபதம் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் பாரதிமோகன். மூன்றாவது படம் கார்த்திக்கை வைத்து இயக்க வாய்ப்பு அவருக்கு வந்தது. கார்த்திக் பற்றி அப்போதையை காலகட்டத்தில் பல விமர்சனங்கள் வந்தன. இயக்குனர்கள் பலரும் கார்த்திக்கை வைத்து படம் எடுக்க தயங்குவார்கள். நடிப்பில் அவரை யாராலும் அசைக்க முடியாது. சிங்கிள் ஷாட்டில் முடித்துக் கொடுத்துவிட்டு போக கூடிய நடிகர்தான்.
ஆனால் சொன்ன தேதியில் அவரை வைத்து படத்தை எடுத்து முடிக்க முடியாது. சில நேரங்களில் காணாமலேயே போய்விடுவார். அவரை தேடி பிடித்துதான் நடிக்க வைக்க வேண்டும். அதனால் பணம் போட்ட தயாரிப்பாளர்கள் பல வகைகளில் நொந்து போயிருக்கின்றனர். அப்படி பாரதிமோகன் தான் இயக்கும் மூன்றாவது படத்துக்கு கார்த்திக்கை புக் செய்கிறார்.
படத்தின் பூஜையின் போது கார்த்திக், பாஸ்.. என்னுடைய அட்வான்ஸ் எங்கே? என கேட்டாராம். அட்வான்ஸ் கொடுத்த பிறகுதான் பூஜைக்கே வந்திருக்கிறார். அந்தப் படத்தின் பூஜைக்கு பாலச்சந்தர், பாரதிராஜா என மூத்த இயக்குனர்கள் எல்லாம் வந்திருக்கின்றனர். பிரம்மாண்டமாக நடந்திருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் அந்நியன் என்று வைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்துக்காக கார்த்திக்கு அட்வான்ஸாக 10 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இசை இளையராஜாவை கமிட் செய்திருக்கின்றனர். அப்போது இளையராஜா பெங்களூரில் வேறொரு படத்திற்காக செல்ல வரச் சொல்லிவிட்டாராம். பாரதிமோகன் பாடலின் காட்சிகளை எல்லாம் போனிலேயே சொல்லியிருக்கிறார். அதன் பிறகு பெங்களுர் சென்ற போது படத்திற்கான டியூனை இளையராஜா போட்டுக் கொடுத்திருக்கிறார். அவருக்கு அட்வான்ஸாக மூன்று லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
உடனே இரண்டு நாள்களில் நான் ஊட்டி போக வேண்டும். அதனால் அதற்குள் படப்பிடிப்பை ஆரம்பித்துவிடுங்கள் என கார்த்திக் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதை போல் பாரதிகண்ணனும் படப்பிடிப்பை ஆரம்பிக்க கார்த்திக்கும் ஊட்டிக்கு சென்று விட்டாராம். அவ்வளவுதான் போன கார்த்திக் வரவே இல்லையாம். தொடர்பு கொள்ள முடியவே இல்லையாம். ஊட்டிக்கும் போயிருக்கிறார்கள். ஆனால் கார்த்திக்கை பார்க்கவே முடியவில்லையாம்.
இப்படியே சில மாதங்கள் போல ஒரு நாள் கார்த்திக் திருமண செய்தி வெளியில் தெரிய வந்திருக்கிறது. சரி திருமணம் முடிந்துவிட்டது. அதன் பிறகாவது வருவார் என பாரதிமோகன் நினைக்க அப்பவும் கார்த்திக் வரவே இல்லையாம். தயாரிப்பு தரப்பில் இருந்து படத்தை டிராப் செய்துவிட்டார்களாம். இளையராஜாவும் அவருடைய அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிட்டாராம். வெறும் டியூன் தான் போட்டிருக்கிறேன். அதனால் வேண்டாம் என இளையராஜா சொல்லிவிட்டாராம்.
ஆனால் கார்த்திக்கிடம் இருந்து அந்தப் பணத்தை வாங்குனார்களா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை என பாரதிமோகன் கூறினார்.
