நடிகையுடன் துள்ளிக்குதித்து ஆட்டம் போட்ட பாரதிராஜா... இந்த வயசுலயும் இப்படி ஒரு எனர்ஜியா?

by ராம் சுதன் |
bharathiraja
X

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இயக்குனர் என்றால் அது பாரதிராஜா தான். இவர் படங்கள் என்றாலே பாசத்திற்கு பஞ்சம் இருக்காது. கிராம மக்களின் எதார்த்த வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதில் பாரதிராஜாவை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.

அதற்கு உதாரணம் தான் கிழக்கு சீமையிலே படம். தற்போது வரை இந்த படத்திற்கு இணையாக எந்தவொரு படமும் வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. சரி நாம் விஷயத்திற்கு வருவோம். பாரதிராஜா சமீபகாலமாகவே படங்களை இயக்குவதை தவிர்த்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

vijayalakshmi

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் பாரதிராஜா இறுதியாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ராக்கி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பாரதிராஜாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாரதிராஜாவின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன்படி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பாரதிராஜா இளம் நடிகை விஜயலட்சுமியுடன் இணைந்து துள்ளி குதித்து ஓடும் வீடியோ தான் அது.

கிட்டத்தட்ட 79 வயதான பாரதிராஜா தற்போது குழந்தை போல துள்ளி குதித்து ஓடும் அந்த வீடியோ தான் இன்று இணையத்தில் டிரெண்டிங். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் உங்கள் படத்திற்கு மட்டுமல்ல உங்களுக்கும் என்றும் பதினாறு வயது தான் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

thanks to galatta tamil

Next Story