More
Categories: Cinema History Cinema News latest news

என்னடா இவ்ளோ நாள் எனக்கு தெரியாம போச்சு.. பாரதிராஜாவுக்கே நடிப்பு கற்றுக்கொடுத்த தனுஷ்…

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகராக தனுஷ் இருக்கிறார். துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் தனுஷ். முதல் படம் அவருக்கு அவ்வளவாக வரவேற்பை பெற்று தரவில்லை.

ஆனால் அதன் பிறகு அவர் நடித்த காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து தனுஷிற்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. அதற்கு பிறகு அவர் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் தனுஷிற்கு பெரும் டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

Advertising
Advertising

தொடர்ந்து நடிப்பில் தன்னை மேம்படுத்தியே வருகிறார் தனுஷ். அப்போதைய கதாநாயகர்களுக்கு சிவாஜி கணேசனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை அதிகமாக இருந்தது. கமல் ரஜினி மாதிரியான பெரும் நடிகர்களே சிவாஜியுடன் திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

தற்சமயம் அதே போல பலரும் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகின்றனர். தனுஷ் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடித்தார். அந்த படத்தின் அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துக்கொண்டுள்ளார் பாரதிராஜா.

அதில் கூறும்போது, தனுஷ் மாதிரியான ஒரு மூளைக்காரனை நான் பார்த்தது இல்லை. அவன் பயங்கரமான அறிவாளி. திருச்சிற்றம்பலத்தில் என்னை தூங்குவது போல நடிக்க சொன்னான்.

நான் உடனே கொட்டாவி விட்டுக்கொண்டு தூங்குவது போல செய்தேன். அதை பார்த்த தனுஷ். அப்பா விழிக்கும்போதுதான் கொட்டாவி வரும். தூங்க போகும்போது வராது என கூறினான். இவ்வளவு நாள் சினிமாவில் இருக்கிறேன். ஆனால் இந்த விஷயம் எனக்கு தெரியாது என கூறியுள்ளார் பாரதிராஜா.

இதையும் படிங்க:விஜய்க்கு வில்லனா நடிக்கனுமா! சத்தியமா முடியாது- யோசிக்காமல் ரிஜக்ட் செய்த 80களின் கனவு கண்ணன்… ஏன் தெரியுமா?

Published by
Rajkumar

Recent Posts