பாரதிராஜாவை 'வட போச்சே'ன்னு ஃபீல் பண்ண வைத்த திரையுலக ஜாம்பவான்கள்... அடடே லிஸ்ட் பெரிசா இருக்கே...
80களில் கிராமிய மணம் மணக்க மணக்க படங்கள் வந்தால் அது இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கைவண்ணமாகத் தான் இருக்கும். அவரது படங்கள் பெரும்பாலும் இயற்கையுடன் இணைந்த வகையில் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும்.
பாரதிராஜாவின் சீடராக பாக்கியராஜ் திரையுலகில் ஜொலித்து வந்தார். பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்களும், நடிகைகளும் பலர் உண்டு. தமிழ்த்திரை உலகில் இயக்குனர் இமயம் என்று சொல்லும் அளவுக்கு அவரது படங்கள் பார்ப்பதற்கே ஒரு தனி அழகுடன் இருக்கும்.
இதையும் படிங்க... சும்மா ஒன்னும் 200 கோடி வாங்கல! விஜயின் ஆரம்ப கால சம்பளத்தை கேட்டா ஆச்சரியப்படுவீங்க
காதலையும், குடும்பத்தின் சிக்கல்களையும் வெகு அழகாகச் சொல்லி இருப்பார் பாரதிராஜா.அதற்கு கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, காதல் ஓவியம், கிழக்குச் சீமையிலே என்ற எத்தனையோ படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ஒவ்வொரு கலைஞனின் மனசுக்குள்ளும் ஏதாவது ஒரு பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும்.
அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜாவின் மனதை இன்று வரை பாதித்துக் கொண்டு இருக்கும் விஷயம் ஒன்று உள்ளது. பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் மரணம் தான் அது.
எப்பேர்ப்பட்ட கணீர் குரலில் பாடுவார் டிஎம்எஸ். அவரது குரலைப் பொருத்தவரை மனிதக்குரல் என்று நான் சொல்ல மாட்டேன். அது தமிழின் குரல். அப்படிப்பட்ட கணீர் குரலை என்னுடைய படங்களிலே ஒரு இடத்தில் கூட பயன்படுத்தாமல் விட்டுவிட்டேனே என்ற ஆதங்கம் இன்று வரை என் மனதில் உள்ளது.
இதையும் படிங்க... ஊசலாடிக் கொண்டிருக்கும் தளபதி 69! எல்லாம் வெங்கட் பிரபு கைலதான் இருக்காம்… இது வேறயா?
அதே போல தமிழ் திரையுலகின் பொக்கிஷமான நாட்டியப் பேரொளி பத்மினி, ஆச்சி மனோரமா, நாகேஷ் ஆகியோருடைய திறமையையும் என்னுடைய படத்தில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அதை எல்லாம் இப்போது நினைச்சாலும் எனக்கு வருத்தமாக உள்ளது என்று பல பத்திரிகை பேட்டிகளில் பதிவிட்டுள்ளார் பாரதிராஜா.
மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.