பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மரணம்!.. அதிர்ச்சியில் திரையுலகம்!..

by சிவா |   ( Updated:2025-03-25 09:28:18  )
manoj
X

#image_title

Actor Manjoj: தமிழ் சினிமாவில் டிரெண்ட்செட்டராக இருந்தவர் பாரதிராஜா. 80களில் திரைப்படங்களில் பல புதிய முயற்சிகளை எடுத்தவர். ஸ்டுடியோவுக்குள் மட்டுமே இயங்கி வந்த சினிமாவை கைப்பிடித்து கிராமத்து பக்கம் கூட்டி சென்றவர். இவரின் ஒரே மகன் மனோஜ். இவரை தான் இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடிகராக அறிமுகம் செய்து வைத்தார் பாரதிராஜா.

ஆனால், மனோஜை ஒரு நடிகராக ரசிகர்கள் ஏற்கவில்லை. மண்ணை கூட நடிக்க வைத்த பாரதிராஜாவால் மகனை ஹீரோவாக்க முடியவில்லை. மனோஜும் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து பார்த்தார். ஆனால், பெரிதாக கிளிக் ஆகவில்லை. அல்லி அர்ஜுனா, மார்கழி திங்கள், வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

manoj

#image_title

ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிப்பதை விட்டுவிட்டு சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். இதில், மார்கழி திங்கள் என்கிற படத்தை அவரே இயக்கியும் இருந்தார். இவர் ஒரு பாடகரும் கூட. தாஜ்மஹால் படத்தில் இடம் பெற்ற ஈச்சி எலுமிச்சி என்கிற பாடலை பாடியிருந்தார்.

மலையாள நடிகையான நந்தனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 2 குழந்தைகளும் உண்டு. இந்நிலையில்தான் மனோஜ் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. சமீபத்தில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்று மாலை சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் அவர் மரணமடைந்திருக்கிறார். அவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Next Story