இதுதான் சும்மா இருக்கிறவன சொரியிறது!..விஜயை குறிவைத்தாரா?..பொது மேடையில் தன் குடும்ப மானத்தை காத்துல பறக்கவிட்ட SAC!..
தமிழ் சினிமாவில் என்னதான் டாப் மோஸ்ட் நடிகராக வலம் வந்தாலும் சொந்த வாழ்க்கையில் சில பிரச்சினைகளுக்குள் தான் வாழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விஜயை பற்றி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் விஜயின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர்.
விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே ஒரு பனிப்போரே நிகழ்ந்து வருகிறது. இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். பேச்சுவார்த்தையும் இல்லை என்ற தகவலும் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் அவ்வப்போது எஸ். ஏ.சி மட்டும் விஜயை பற்றி மறைமுகமாக பேசும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் அவர் பாட்டுக்கு அவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுநாள் வரை தன் தந்தையை பற்றி மறைமுகமாகவோ, நேரிடையாகவோ எதுவும் பேசியதில்லை. இப்படி இருக்க
இதையும் படிங்க : ஷூட்டிங் நின்னு போச்சு!! “என் மேல அப்படி என்ன கோபம்??” சிவகார்த்திகேயனிடம் புலம்பி தள்ளிய இயக்குனர்…
சமீபத்தில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் சார்பில் ஒரு தொண்டு நிறுவனத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். கூடவே திரைப்பட இயக்குனரான விஜயின் தந்தையும் வந்திருந்தார். அப்போது பேசிய எஸ்.ஏ.சி எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி செய்த முறை மக்களிடம் அவர் பழகும் விதம் ஆகியவற்றை வியந்து பாராட்டினார்.
மேலும் அவர் பேசும் போது சங்கடமான சூழ்நிலையையும் தன் இன்முகத்துடன் எப்படி சமாளிக்கிறார் என்று தெரியவில்லை. குடும்பத்தில் இருக்கும் ஒரு பிள்ளை மனைவியை சமாளிப்பதே கஷ்டம் என்ற உவமையுடன் கூறும் போது மேடையில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர். பொதுவாகவே ஒரு மனைவியை சமாளிப்பது என்ற வார்த்தை தான் பலரும் கூற கேட்டிருக்கிறோம். ஆனால் இவரோ ஒரு பிள்ளை என்பதையும் சேர்த்து கூறியது விஜயை தான் என்று நினைத்து அனைவரும் சிரித்து விட்டனர். சிரிப்பதை பார்த்த எஸ்.ஏ.சி ‘ஹேய் நான் பொதுவா சொன்னேன்’ என்று குறிப்பிட்டு சொன்னார்.