சினிமா உலகில் யாரின் காலை எப்போதும் யார் இழுப்பார் என சொல்லவே முடியாது. தூக்கத்தில் கூட கண்களை முழித்துகொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அடக்கம் செய்துவிடுவார்கள். குறிப்பாக மோசடி என்பது திரையுலகில் மிகவும் அதிகம். பல வருடங்களாக கொட்டை போட்டு பழம் தின்னவர்களையே ஏமாற்றிவிடுவார்கள். பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் அந்த மோசடி நடக்கும்.
அதனால்தான் சினிமாவில் எப்போதும் யாரையும் நம்ப மாட்டார்கள். எதையும் எழுத்துப்பூர்வமாகவும், பத்திரத்திலும் ஒப்பந்தம் போடுவார்கள். ஏனெனில் அப்போதுதான் சொன்னதை செய்யவில்லை எனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியும். ஆனால், இதையெல்லாம் மீறியும் மோசடி நடக்கும்.
தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய, பல புதிய நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் இவர். இவர் இயக்கிய முதல் படத்தை ஹிந்தியில் எடுக்க ஆசைப்பட்டு ஒரு ஏஜெண்ட் மூலம் அதற்கான வேலைகளை இறங்கியிருக்கிறார். படம் முடிந்து வெளியான பின்னர்தான் அது ஹிந்தி படமே இல்லை படத்தில் நடிகர்கள் பேசியது பேஜ்புரி மொழி என்பது அவருக்கு தெரியவந்தது.
அதேபோல் சில படங்களில் ஹீரோவாக நடித்த அந்த இயக்குனரின் மகன் ஒரு திரைப்படத்தை இயக்கினார். இதில், அந்த இயக்குனரும் நடித்தார். இந்த படத்தை தமிழில் சில படங்களை இயக்கிய இயக்குனர் ஒருவரே தயாரித்தார். இவர் விஷாலை வைத்து ஒரு படத்தையும், சிம்புவை வைத்து ஒரு படத்தையும் இயக்கியவர்.
படம் உருவாகி கொண்டிருந்த போது படத்திற்கு செலவு செய்ய என சொல்லி 10 லட்சம் பணம் கடன் கேட்டிருக்கிறார். அதை வாரிசு இயக்குனர் கொடுத்துவிட்டார். அதன்பின், மீண்டும் பணம் கேட்க அம்மாவிடம் இருந்த நகைகளை அடமானம் வைத்து காசு கொடுத்திருக்கிறார். படம் வெளியாகி ஃபிளாப் ஆன நிலையில் வாங்கிய கடனை அந்த இயக்குனர் திருப்பி கொடுக்கவே இல்லையாம்.
பலமுறை கேட்டு கேட்டு வெறுத்துப்போனார் வாரிசு. வட்டி கட்ட முடியாமல் அம்மாவின் நகை வங்கியிலேயே மூழ்கிவிட்டதாம். இதனால் அவர் மன உளைச்சலுக்கு உள்ளானாராம். சமீபத்தில் அந்த வாரிசு இயக்குனர் மாரடைப்பில் இறந்தும்போனார். அவரின் இறப்பிற்கு கூட அந்த இயக்குனர் செல்லவில்லை. இதுதான் சினிமா உலகம் போல..