More
Categories: Cinema News latest news

உரிமைக்காக போராடு சரி!. கிடைச்சா என்ன பண்ணுவ? வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா பேசிய சேரன்

சினிமாவில் அதிகமாக பேசப்படுவது சாதி, மதங்களை பேசும் படங்களை பற்றித்தான். சமீபகாலமாகவே சாதிகளை பேசும் படங்கள் அதிகமாக வரத் தொடங்கி விட்டது. அதுவும் மாரி செல்வராஜ், அமீர், பா.ரஞ்சித் போன்றவர்கள்தான் அதிகமாக சாதி படங்களை எடுக்கிறார்கள் என்ற கருத்தும் பேசப்பட்டு வருகிறது.

இப்படி அவர்களை விமர்சிக்கும் போது மாரி செல்வராஜோ அல்லது பா.ரஞ்சித்தோ அல்லது அமீரோ கூறும் குற்றச்சாட்டு என்னவெனில் தேவர் மகன் படம் வரும் போது நீங்கள் எல்லாரும் எங்க போனீங்க? சின்னக்கவுண்டர் படம் வரும் போது எங்கு இருந்தீர்கள்? ஆனால் இப்பொழுது அந்த மாதிரி படங்கள் வரும் போது மட்டும் துடிக்க காரணம் என்ன என கேள்வி கேட்டவர்களையே பதில் கேள்வி கேட்கின்றனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க : இப்ப இருக்க நடிகர்களுக்கு ஒன்னுமே தெரியாது… விஜயகாந்தை கேட்டால் அக்குவேறு ஆணிவேறு என பிட்டு வைப்பார்!

இந்த நிலையில் ஒரு யுடியூப்பில் ஒருவர் பேசும் போது கூட சினிமாக்காரர்களை பற்றி மட்டமாக பேசியதோடு சாதிகளை இப்போது தான் நாங்கள் மறந்து வருகிறோம் , ஆனால் அதை  மீண்டும் மாரி செல்வராஜ் போன்ற ஆள்கள், பா.ரஞ்சித் போன்ற ஆள்கள் நியாபகப்படுத்துகின்றனர் என்று வீடியோவில் பேசியிருந்தார்.

ஆனால் மாரிசெல்வராஜின் ஒரே குறிக்கோள் எந்தவொரு சாதியையும் உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது இல்லை. என்னுடைய உரிமையை நான் கேட்டு வாங்குகிறேன் என்பதை தான் படத்தில் காட்டுகிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு பட விழாவில் பேசிய சேரன் சாதிகளை கடந்து மதங்களை கடந்து நாம் எல்லாரும் மனிதர்களாகத்தான் வாழ வேண்டும் என்றும் கிராமத்தில் மட்டும்தான் இந்த சாதிய பிரச்சினைகள் நடந்து வருகிறது , நகரங்களில் சாதிக்காக வெட்டுக் குத்து பட்டவன் என்ற செய்தியை பார்த்திருக்கிறோமா?

இதையும் படிங்க : பாலசந்தரோ? பாரதிராஜாவோ இல்லங்க… கோலிவுட்டில் முதல் தேசிய விருது இயக்குனர் இவர் தான் தெரியுமா?

அப்போ அந்த கிராமத்தில் தான் ஏதோ பிரச்சினை இருக்கிறது. வெட்டுவதாலேயோ அடிச்சுக்கிட்டு இருப்பதாலேயோ சாதி வளர்ந்து விடாது, குறையவும் குறையாது, இன்னும் கோபம் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கும் என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் மாரிசெல்வராஜ் மற்றும் ரஞ்சித் அதிகமாக பேசப்படுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களின் உரிமையை அவர்கள் சத்தமாக கேட்கிறார்கள், அதில் என்ன தவறு இருக்கிறது? உரிமை வேண்டுமென்றால் கத்ததான் வேண்டும். ஆனால் மாரிசெல்வராஜ் ஆகட்டும், ரஞ்சித் ஆகட்டும், உரிமையை வாங்கிய பிறகு எல்லாரும் கைகளை கோர்த்து நிற்க வேண்டும் , அதாவது எல்லா மதமும் ஒன்று என்ற நிலைப்பாட்டினை உருவாக்க வேண்டும் என சேரன் கூறினார்.

Published by
Rohini

Recent Posts