சென்னையில் சேரன் அடிக்கடி போகும் கடை! பதிலை கேட்டதும் ஷாக் ஆன தொகுப்பாளர்.. அப்படி என்ன கடை?
Director Cheran: தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்களை மட்டும் எப்பவுமே மறக்க முடியாது. அந்த வகையில் மக்கள் மனங்களை வென்ற ஒரு இயக்குனராக இருந்தவர் இயக்குனர் சேரன். அவர் இயக்குனராக அடைந்த புகழால்தான் நடிகராக மாறினார்.
சேரனின் இயக்கத்தில் பல நல்ல நல்ல படங்களை நம்மால் ரசிக்க முடிந்தது. மனித உறவுகளை மையமாக வைத்து பல கிராமியம் சார்ந்த படங்களை உருவாக்குவதில் மிகச்சிறந்த இயக்குனர் சேரன். இப்படியும் உறவுகள் இருக்க முடியுமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு சேரனின் படங்கள் அமைந்திருக்கும்.
இதையும் படிங்க: வாரிசு நடிகரை இரண்டாம் திருமணம் செய்ய இருக்கும் சமந்தா… யார் என்பது தான் ஹைலைட்டே..!
பாரதிகண்ணம்மா மற்றும் பொற்காலம் போன்ற படங்கள் சேரனின் படைப்புகளை பறைசாற்றும் படங்களாக அமைந்தன. சிறந்த விமர்சனம் பெற்ற படங்களாக அந்த இரு படங்கள் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் கும்பலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான் வெற்றிக் கொடி கட்டு. அந்தப் படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல் கிராமம் மற்றும் நகரம் குடியேற்றத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாக பாண்டவர் பூமி திரைப்படம் அமைந்தது.
இதையும் படிங்க: நீ முதல்ல ஆஸ்கார் வாங்கு.. உன்ன மீட் பண்றேன்!.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கண்டிஷன் போட்ட பிரபலம்
அந்தப் படத்தில் பாசத்தின் பிணைப்பை அழகாக காட்டியிருப்பார் சேரன். இந்த நிலையில் தற்போது சேரன் வெப் சீரிஸ் இயக்கும் பக்கம் தன் கவனத்தை திருப்பியிருக்கிறார். சமீபத்தில் கூட Journey என்ற வெப் சீரிஸை இயக்கியிருந்தார் சேரன். அந்த வெப் சீரிஸின் சக்சஸ் மீட் கூட சமீபத்தில் நடந்தது.
அந்த விழாவில் படத்தில் நடித்த சரத்குமார் மற்றும் கலையரசன் போன்றோர்கள் கலந்து கொண்டனர். அப்போது சென்னையில் எந்த கடைகளுக்கெல்லாம் செல்வீர்கள்? என்னென்ன வாங்குவீர்கள் என்பது சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது சரத்குமார் பெரிய ஸ்டார் ஹோட்டல் பெயரை குறிப்பிட சேரன் வித்தியாசமான பதிலை கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: விட்டா வில்லனில் சூப்பர்ஸ்டார் பட்டம் வாங்கிடுவாரு போலயே… எஸ்.ஜே.சூர்யா படத்தின் மாஸ் அப்டேட்…
அதாவது இப்போது வரைக்கும் சேரன் அணியும் சட்டையில் இருந்து பேண்ட் வரைக்கும் டி. நகரில் உள்ள ஒரு ப்ளாட் பார்ம் கடையில் தான் வாங்குவாராம். பெரிய பெரிய பிராண்டட் கடைகளுக்கெல்லாம் செல்ல மாட்டாராம். இதை சொன்னதும் அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர்.