வலைப்பேச்சு பிஸ்மியை கட்டம் கட்டி தூக்க பிளான் போட்ட சேரன்… அப்படி என்னதான்ப்பா பிரச்சனை?...
“பொற்காலம்”, “வெற்றிக்கொடி கட்டு”, “பாண்டவர் பூமி”, “ஆட்டோகிராஃப்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் சேரன். இயக்குனர் மட்டுமல்லாது தான் இயக்கிய “ஆட்டோகிராஃப்”, “மாயக்கண்ணாடி” ஆகிய திரைப்படங்களிலும் “சொல்ல மறந்த கதை”, “யுத்தம் செய்”, “முரண்”, “மூன்று பேர் மூன்று காதல்” போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி, சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் சேரனுடன் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
சேரன் “பாரசீக ரோஜா” என்று ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்ததாம். அப்போது பிஸ்மி, வண்ணத்திரை இதழில் அத்திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டாராம். மேலும் அந்த சமயத்தில்தான் கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து மத பிரச்சனைகள் ஏற்பட்டிருந்ததாம். ஆதலால் “பாரசீக ரோஜா” படம் வெளிவந்தால் மத நல்லிணக்கத்திற்கு கீரல் ஏற்படும் எனவும் பிஸ்மி அதில் எழுதியிருந்தாராம்.
பிஸ்மி எழுதிய கட்டுரையை தொடர்ந்து அத்திரைப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் பயந்துவிட்டார்களாம். ஆதலால் அத்திரைப்படம் அப்படியே டிராப் ஆகிவிட்டதாம். இதனை தொடர்ந்து ஒரு நாள் சேரன் தனது உதவியாளரிடம் மலர்கொத்து ஒன்றை பிஸ்மிக்கு கொடுத்துவிட்டாராம். அதில் நன்றி என்று ஒரு சீட்டில் எழுதியிருந்ததாம். அதன் பின் அடுத்த நாளும் பிஸ்மிக்கு மலர்கொத்து கொடுத்துவிட்டாராம். இப்படி தினமும் வந்துகொண்டிருந்ததாம்.
இது சரியில்லையே என்று நினைத்த பிஸ்மி, சேரனின் உதவியாளரிடம் ஒரு நாள் “சேரனுக்கு தைரியம் இருந்தா என்னைய நேர்ல வந்து பாக்கச்சொல்லு” என கண்டித்து அனுப்பி விட்டாராம்.
பிஸ்மி அக்காலகட்டத்தில் பத்திரிக்கைத் துறையில் Free lancer ஆக பணியாற்றிக்கொண்டிருந்தாராம். அதன்படி பல பத்திரிக்கைகளில் அவர் எழுதுவார். இந்த நிலையில் சேரன், அந்த பத்திரிக்கைகளைச் சேர்ந்த ஆசிரியர்களை எல்லாம் தொடர்பு கொண்டு “பிஸ்மிக்கு உங்கள் பத்திரிக்கையில் எழுத வாய்ப்பு வழங்காதீர்கள்” என கூறி பிஸ்மியின் தொழிலை முடக்க முயற்சி செய்தாராம்.
இதனை தொடர்ந்து “பாண்டவர் பூமி” திரைப்படத்தின் உருவாக்காத்தின்போது பிஸ்மியும் சேரனும் நேரில் சந்தித்து இது குறித்து விவாதித்து அந்த பழைய கசப்புகளையும் மறந்து நண்பர்களாக ஆனார்களாம்.
இதையும் படிங்க: உட்கார சேர் தராமல் அசிங்கப்படுத்திய விவேக்… பிளான் பண்ணி பழிவாங்கிய மூத்த பத்திரிக்கையாளர்..