ரஜினி vs விஜய்! சூப்பர்ஸ்டார் பட்டமே நிரந்தரமில்லை - ஏன்டா போட்டி போடுறீங்க? கடுப்பான சேரன்

by சிவா |   ( Updated:2023-08-08 01:48:41  )
cheran
X

மீடியா யாரை பார்த்தாலும் எங்கு பார்த்தாலும் சினிமா பிரபலங்களுடன் கேட்கும் ஒரெ கேள்வி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க என்பதுதான். அதுவும் ஒரு மூத்த நடிகர்களோ அல்லது மூத்த இயக்குனர்கள் , தயாரிப்பாளர்களோ சிக்கினால் அவ்ளோதான். அவர்களை சுற்றி வளைத்துக் கொண்டு இந்த கேள்வியை கேட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று பிரபல இயக்குனர் சேரன் ஒரு விருது வழங்கும் விழாவிற்கு வர அவரை சூழ்ந்து கொண்டு பல கேள்விகளை முன்வைத்தனர். அதாவது சேரன் படங்கள் பெரும்பாலும் செண்டிமெண்ட் படங்களாகவே இருந்தன. ஆனால் இப்போது வருகிற படங்கள் சாதி, மதத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகின்றன. இதை எப்படி பார்க்கிறீர்கள் என்று அவரிடம் நிரூபர்கள் கேட்டனர்.

இதையும் படிங்க: இந்த படத்துக்கு ஏண்ட்டா வந்தோம்? ரசிகர்களின் வயித்தெறிச்சலை வாங்கிக் கட்டிய 5 படங்கள்

அதற்கு சேரன் இன்னும் நான் என் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை இவர்களோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று நெத்தியடி பதிலாக கூறினார். மேலும் சினிமாவில் யார் பெரியவர் ? இவரா? அவரா? என்று போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றது. அதை பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு சினிமாவில் சிவாஜி மட்டும்தான் பெரியவர் என்று சேரன் கூறினார்.

மேலும் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர். அதற்கு சேரன் இது என் வேலை இல்லை என்றும் நான் என் தொழிலை பார்க்கிறேன், என் வேலையை பார்க்கிறேன், ரசிகர்களும் அவரவர் வேலைகளை பார்க்க வேண்டும் என கூறினார்.

இதையும் படிங்கஎனக்கு அவர் மட்டும்தான் போட்டி!.. வேற எவனும் இல்ல!.. ரஜினி கணக்கு இதுதானாம்!…

மேலும் நாட்டில் எவ்ளவோ பிரச்சினைகள் போய்க் கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஒரு பிரச்சினயா? மணிப்பூர் பிரச்சினையை பற்றி யாருமே பேசமாட்டிக்கீங்க. அதை விட்டுட்டு இதை பற்றியே கேட்டால் எப்படி? யாரும் யாருக்கும் எந்த இடமும் நிரந்தரமில்லை. ஒரு நாள் எல்லாரும் போகத்தான் போறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் யாராவது ஒரு அந்தஸ்தில் இருப்பார்கள். முதலில் இந்த பட்டமும் அங்கீகாரமுமே நிரந்தரமில்லை. அதற்கு இவ்ளோ போட்டி தேவையில்லை.

பெரும் உலகத்தையே காட்டி ஆண்டவர்களை நாம் மறந்துட்டோம். அதை விட்டு கேமராவை தூக்கிட்டு ரசிகர்களை ஊக்குவிக்க வேண்டாம். ரசிகர்களுக்கு நீங்கள் சொல்லுங்கள். இப்படி இருக்காதீங்க, உங்க வேலை இது இல்லை என்று நீங்கள் சொல்லுங்கள் என பத்திரிக்கையாளர்களுக்கு அன்பான வேண்டுகோளையும் வைத்தார் சேரன்.

இதையும் படிங்க: துபாய்க்கெல்லாம் போனா கல்லால அடிச்சி கொன்றுவாங்க! – வடிவேலுவின் லீலைகளை அவிழ்த்த சிங்கமுத்து..

Next Story