சேரன் கடுப்புக்கு ஆளான மஞ்சுளா விஜயகுமார்!.. விஷயம் அறிந்து விஜயகுமார் என்ன செய்தார் தெரியுமா?..
நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்த ஏராளமான இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் சேரன். உதவி இயக்குனராக சில காலம் பணிபுரிந்து அதன் பின் ஒரு வெற்றி இயக்குனராக உயர்ந்தவர். இவர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
அப்போது இருந்தே ரவிக்குமாருக்கும் சேரனுக்கும் அவ்வப்போது சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுமாம். பிரிந்து போவாராம். வேலை இல்லாமல் திரும்பவும் ரவிக்குமாருடன் இணைவாராம். இதையே ஒரு வேலையாக வைத்திருந்திருக்கிறார் சேரன். கே.எஸ்.ரவிக்குமாரின் வெற்றி படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க படம் விஜயகுமார், சரத்குமார் நடிப்பில் வெளிவந்த சேரன் பாண்டியன் என்ற குடும்ப திரைப்படமாகும்.
படம் மாபெரும் வெற்றி பெற்றது. கிராமத்து கதையை பின்னனியில் வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் உதவி இயக்குனராக தனது வேலையை சிறப்பாக செய்தார் சேரன். அப்போது ஒரு காலை காட்சியில் மஞ்சுளா விஜயகுமாரின் காட்சிகள் தான் படமாக்கப்பட்டது.
காலை காட்சி என்பதால் மஞ்சுளாவும் எப்போதும் போல தயாராக வந்து நின்றிருக்கிறார். அவரை பார்த்ததும் சேரனுக்கு ஒரே கடுப்பு. விடியற்காலை காட்சி தானே, அதுக்கு ஏன் இவ்ளோ மேக்கப்? என்று கூறி அவர் ஒரு சேலையையும் கொடுத்து இதை கட்டினால் போதும், மேக்கப்பும் அதிகமாக வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க : விஜயை வைச்சு செய்யப்போறேன்!.. பொறாமையில் பொலந்து கட்டிய விஷால்!..
ஆனால் மஞ்சுளாவுக்கு இவர் சொன்னதில் உடன்பாடு இல்லையாம். கோபப்பட்டு ரவிக்குமாரிடம் சொல்ல அவரும் அதை ஏற்றுக் கொண்டு அவர் பாணியில் அமைதியாக மஞ்சுளாவிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனாலும் மஞ்சுளா கேட்காமல் அப்படியே நடித்துவிட்டாராம். படமும் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் படம் வெளியாவதற்கு முன் ப்ரிவியு ஷோ பார்த்திருக்கிறார் மஞ்சுளா.
அப்போது படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் மிகவும் எதார்த்தமாக இருந்திருக்கின்றனர். இவர் மட்டும் கொஞ்சம் ஓவராக ரிச்சாக தோன்றியிருக்கிறார். அதன் பிறகே சேரன் சொன்னதை மனதில் நினைத்துக் கொண்டு சேரனிடமே போய் நீ சொன்னதை நான் கேட்காமல் போய்விட்டேன் என்று வருத்தம் தெரிவித்தாராம்.
இதையும் படிங்க : போடா!..ஆண்டவனே நம்ம பக்கம் இருக்குறான்.. நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?! இது ரஜினி ஸ்பெஷல்
இதை அறிந்த விஜயகுமாரும் மஞ்சுளாவை திட்டியிருக்கிறார். ஒரு இயக்குனர், உதவி இயக்குனருக்கு தெரியாதது உனக்கு தெரிந்து விடுமா என்ன? என்று சத்தம் போட்டாராம்.