காசுலாம் இல்ல!.. இளையராஜா கேட்பது இதுதான்!.. உங்களால செய்ய முடியாதா?.. இயக்குனர் கேள்வி!..

by சிவா |   ( Updated:2025-04-18 04:41:53  )
காசுலாம் இல்ல!.. இளையராஜா கேட்பது இதுதான்!.. உங்களால செய்ய முடியாதா?.. இயக்குனர் கேள்வி!..
X

Ilayaraja: தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. 70,80களில் பிறந்தவர்கள் இப்போதும் அவரின் பாடல்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். ஒரு தலைமுறையே தனது இசையால் கட்டிப்போட்டவர் இளையராஜா. 70களின் இறுதியில் அன்னக்கிளி திரைப்படம் மூலம் சினிமாவில் இசையமைக்க துவங்கினார்.

தமிழகத்தில் ஹிந்தி பாடல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த அந்த காலத்தில் இளையராஜாவின் வருகை எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. இளைராஜாவின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பாடியது. சென்னை போன்ற பெரிய நகரத்தில் வசித்த மக்களும் ராஜாவின் கிராமத்திய இசைக்கு மயங்கினார்கள்.

இப்போது கூட பல படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் ஹிட் பாடல்கள் தேவைப்படுகிறது. பல படங்களில் இளையராஜாவின் பழைய பாடல்களை இயக்குனர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் அது போன்ற பாடல்களை போட அனிருத் போன்ற இசையமைப்பாளர்களால் எப்போதுமே உருவாக்க முடியாது என்பதே நிதர்சனம்.

இங்குதான் காப்புரிமை என நோட்டீஸ் அனுப்புகிறார் இளையராஜா. என்னுடைய அனுமதி இல்லாமல் பாடல்களை பயன்படுத்தியற்கு இவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என கேட்கிறார். அதேநேரம், இளையராஜா சம்பளம் வாங்கிக்கொண்டு இசையமைத்து கொடுத்தார். அதோடு அவருக்கும் பாடல்களுக்கும் உள்ள உரிமை முடிந்துவிட்டது. காசு கொடுத்த தயாரிப்பாளர்கள் அந்த பாடலை ஆடியோ நிறுவனங்களிடம் விற்றுவிட்டால் அந்த பாடல்களின் உரிமை அந்த நிறுவனங்களிடமே இருக்கும். இளையராஜா காசு கேட்க முடியாது என சிலர் வாதிடுவது உண்டு.

ஆனால், அந்த பாடல்களை உருவாக்கியது நான்.. அறிவுசார் சொத்து அடிப்படையில் என்னால் வழக்கு தொடர முடியும் என்பது ராஜாவின் வாதமாக இருக்கிறது. சமீபத்தில் கூட குட் பேட் அக்லி படத்தில் தன்னுடைய 3 பாடல்களை பயன்படுத்தியதற்கு ரூ.5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் இளையராஜா.

இந்நிலையில் தமிழ்படம் பட இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது டிவிட்டரில் ‘விஜய் ஆண்டனியை வைத்து நான் இயக்கிய ரத்தம் படத்திற்காக ராஜா சாரின் இசையில் உருவான ‘ஒரு கூட்டுக்கிளியாக ஒரு தோப்பு குயிலாக’ பாடலை பயன்படுத்த அவரிடம் அனுமதி கேட்டோம். அவர் என்ன தொகை கேட்கிறாரோ அதை கொடுக்கவும் தயாரிப்பாளர் தயாராக இருந்தார். ஆனால், ‘பணம் எதுவும் வேண்டாம்..பாட்டை யூஸ் பண்ணிக்கோங்க’ என சொன்னார். தன்னிடம் அனுமதி வாங்கி பயன்படுத்த வேண்டும் என அவர் நினைக்கிறார். நாம் அவரின் பக்கம் இல்லை எனில் வேறு யார் பக்கம் நிற்க போகிறோம்’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Next Story