அந்த ஒரு படத்தால என் தூக்கமே போச்சு... எவ்ளோ பெரிய இயக்குனர்... அவருக்கா அந்த நிலைமை?

அறுவடை நாள், பிக்பாக்கெட் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ஜி.எம்.குமரன். இந்த இரு படங்களுமே ரிலீஸான போது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. அறுபடை நாள் படத்தில் பிரபுவும், பிக்பாக்கெட் படத்தில் சத்யராஜூம் நடித்திருப்பார்கள்.

ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த இவர் பின்னர் இயக்குனர் ஆனார். தற்போது பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் உடன் பேட்டி ஒன்றில் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது நேயர் ஒருவர் பிக்பாக்கெட் படத்தில் 80களிலேயே போலிச்சான்றிதழ், போலி செக் பற்றி எடுத்துருப்பீர்கள். அந்த ஐடியா எப்படி கிடைத்தது என்று கேட்டார். அதற்கு இவ்வாறு இயக்குனர் ஜி.எம்.குமரன் பதில் அளித்தார்.

அது ஒண்ணுமில்ல. கதை சொல்லப் போற அன்னைக்கு பேப்பர் நியூஸ் வந்தது. பாலுமகேந்திரா கைது. பொய் சர்டிபிகேட் கொடுத்ததுல அரெஸ்ட் பண்ணிட்டாங்கன்னு செய்தி மேல போட்டுருந்தாங்க.

கீழே இருக்குற நியூஸ்ல அதே படத்துக்கு அவர் நேஷனல் அவார்டு வாங்கிய செய்தி இருந்தது. என்ன படத்துக்காக அவரை அரஸ்ட் பண்றாங்களோ அந்தப் படத்துக்கு நேஷனல் அவார்டு. ரெண்டுமே ஒரே பக்கத்துல வந்துருச்சு. அதான் அந்தக் கதையோட இன்ஸ்பிரேஷன்.

அதை வச்சிக்கிட்டு ஸ்கிரிப்ட் பண்ணிட்டோம். அதே நேயர் 'உருவம் படம் அந்த நேரத்துல ரீச்சாகாததுக்கு என்ன காரணம்? அதனால கோபம் இருக்குதா?'ன்னும் கேட்டார்.

Uruvam, GMK

Uruvam, GMK

அதற்கு இயக்குனர் ஜி.எம்.குமரன், கோபம்லாம் இல்ல. 12 நாள்ல எடுத்த படம். எப்படி கோபம் வரும்? டிஸ்டிரிபியூஷன் தெரியாது. படத்தை யாரும் வாங்கல. டிஸ்டிரிபியூட்டர்ஸ் வாங்கினாங்க. அவங்க பணத்தை சம்பாதிச்சாங்களா, சம்பாதிக்கலையான்னும் தெரியாது. அது சரியா போகல. ஆனா தெலுங்குல பெரிய ஹிட்டாச்சுன்னு ஏவிஎம்.சரவணன் சார் எங்கிட்ட சொன்னாரு என்றார்.

அப்புறம் அதே நேயர் 'அந்தப் படத்தை முதல் தடவை நைட் வீட்டுல பார்த்தேன். அன்னைக்கு வீட்டுல யாரும் இல்ல. நான் மட்டும் தான் இருந்தேன். நிஜமாகவே நான் பயந்துட்டேன். புல் நைட்டும் தூங்கல' என்றார். 'ஓ... நாங்களும் இன்னும் வரைக்கும் அந்தப் படத்தை எடுத்துட்டு தூங்கலப்பா. கடன் தீரவே மாட்டேங்குது' என்று சொல்லி சிரிக்கிறார்.

 

Related Articles

Next Story