ஆண்மைத்தன்மை இருக்கா?..பொன்னியின் செல்வனில் ஏன் அத காட்டல?..விளாசிய பிரபல இயக்குனர்..
மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் பொன்னியின் செல்வன் திரைப்படம். படம் வெளியாகி வசூலிலும் சரி மக்களிடமும் சரி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் இந்த படம் சிலர் முன்னிலையில் கலவையான விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த இயக்குனர் கௌதமன் கூறியதாவது: இந்த படம் எடுத்த விதம், இப்பொழுது வசூலை குவிக்கும் விதம் எல்லாம் சரி தான். ஆனால் இந்த படைப்பை எடுக்கும் முன் அதன் வரலாற்றின் உண்மைதன்மையை நன்கு ஆராய்ந்து சொல்லவேண்டும். எத்தனையோ பேரரசுகள் இருந்தாலும் சோழப்பேரரசு மட்டும் தான் 350 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே மன்னர் வழிவந்த பேரரசு ஆகும்.
சோழர்களுடைய கொடி புலிக்கொடி என்று அனைவரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்ட புலிக்கொடியை உங்களால் படத்தில் காட்ட முடியவில்லை என்றால் எதற்காக படம் எடுக்க வேண்டும்? ஏனெனில் அப்பொழுது சோழர்கள் கொடி என்றாலும் காலப்போக்கில் அது பிரபாகரனின் சின்னமாக இருந்ததன் காரணமாக தான் அதை காட்டியிருக்க மாட்டார்.
அப்படி என்றால் அந்த பயத்தினால் தான் படத்தில் காட்டவில்லையா? பயம் இருந்தால் ஏன் பொன்னியின் செல்வன் நாவலை தொட வேண்டும்? அதை மீறி நிரூபர்கள் கேட்டாலும் நான் காட்டியது சோழர்கள் பயன்படுத்திய புலிக்கொடி தான் என்று சொல்லியிருக்கலாமே! என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார் கௌதமன். மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் தமிழுணர்வோடு இல்லையென்றால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.