Actor Karthick: தமிழ் சினிமாவில் 80 90களின் காலகட்டத்தில் காதல் மன்னனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கிய கார்த்திக் நவரச நாயகன் என்ற பட்டத்தோடு இன்றுவரை மக்கள் மத்தியில் அவருக்கு என ஒரு தனி இடத்தையே பிடித்திருக்கிறார். நடிகர் கார்த்திக் என்றாலே குறும்பு மன்னன் என்று தான் அவருடன் நடித்த பல நடிகைகள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம்.
அந்த அளவுக்கு அவர் பழகுவதில் மிகவும் எளிமையானவர். ஜாலியானவர். அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாலே போதும் ஏழேழு ஜென்மம் பழகிய ஒரு நெருக்கத்தை அவர் நம்மிடம் கொடுத்து விடுவார். அந்த அளவுக்கு மிகவும் எதார்த்தமான மனிதர் கார்த்திக். அவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் சிறந்த புதுமுக நடிகருக்கான தமிழக அரசின் விருதை கார்த்திக் பெற்றார் .
இதையும் படிங்க: நாட்டாமை உருள தண்டம் போட்டதெல்லாம் வீணாப்போச்சே!.. தோல்வி முகத்தில் ராதிகா சரத்குமார்…
அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு பிறகு அவர் நடித்த பல படங்கள் தோல்வியையே சந்தித்தன. அதனால் ஆரம்பத்தில் அவருக்கு என ரசிகர்கள் உருவாகவில்லை. அதன் பிறகு அவருடைய வாழ்க்கையையே திருப்பி போட்ட படமாக அமைந்தது மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த மௌன ராகம். அந்தப் படத்தில் வெறும் 20 நிமிடமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் பட முழுக்க வந்த ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டு சென்றார்.
அந்த படத்தில் இருந்து தான் கார்த்திக்குக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உருவானார்கள். அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு வெற்றியோகம்தான். அந்த நேரத்தில் ஒரு பிளேபாயாக வலம் வந்த கார்த்திக் படப்பிடிப்பிற்கு எப்போதுமே தாமதமாக வருவார். சில நேரங்களில் வராமல் கூட இருப்பார் என பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையும் படிங்க: என்னை காமெடியன்னு நினைச்சியா?!.. சிவகார்த்திகேயனை ஓவர் டேக் செய்த சூரி.. கருடன் வசூல் இதுதான்!..
அவரை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் தயங்கி இருக்கிறார்கள். அதற்கு காரணம் சரியான நேரத்தில் அவர் படப்பிடிப்பிற்கு வர மாட்டார் என்பதுதான். ஆனால் இயக்குனரும் கதை ஆசிரியருமான ஜி எம் குமார் கார்த்திக்கை பற்றி ஒரு தகவலை கூறி இருக்கிறார். ஜி எம் குமார் இயக்கத்தில் கார்த்திக் நடித்த படம் இரும்பு பூக்கள்.
அந்தப் படப்பிடிப்பின் போது கார்த்திக் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே வந்து விடுவாராம். அது மட்டும் அல்லாமல் அனைவரும் போன பிறகுதான் இவர் போவாராம் .நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார். அவரைப் பற்றி பல விமர்சனங்கள் வந்தன. ஆனால் அதுக்கு காரணம் என்னவென்றால் கார்த்திக்கு ஒருவர் பிடித்து விட்டால் அவருடன் எளிதாக ஜெல் ஆகிவிடுவார். அவர்கள் சொன்னபடி நடப்பார். இதே ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவருடைய மூடும் மாறிவிடும். இதனால் கூட அவரைப் பற்றிய இந்த விமர்சனங்கள் எழுந்திருக்கலாம் என ஜி எம் கூறினார்.
இதையும் படிங்க: அவரு சொன்னதனால தான் இந்தியன் படத்துல கமல் நடிக்கவே சம்மதித்தாராம்… யார் அந்த பிரபலம்?
Viduthalai 2:…
விடுதலை 2…
Actor karthi:…
அமரன் திரைப்படம்…
Lubber Pandhu: கடந்த…