அவன் எப்படி செத்தான் தெரியுமா? வசமாக சிக்கிய ‘அறம்’ பட இயக்குனர்! வெளியான அதிர்ச்சி தகவல்

Published on: June 24, 2023
aram
---Advertisement---

சில தினங்களுக்கு முன்பு அறம் பட இயக்குனர் மீது ஒரு இலங்கை தமிழ் பெண் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதாவது 30 லட்சம் தொகையை வாங்கிக் கொண்டு மோசடி செய்தார் என்று கூறினார். படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் இலங்கையில் இருந்து வந்த தமிழ் பெண்ணை கோபி நைனாரும் அவருடைய சில உதவியாளர்களும் சேர்ந்து படத்தை எடுத்து தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதைப் பற்றி கோபி நயினாரிடம் கேட்டபோது அந்தப் பெண் யார் என்று தனக்குத் தெரியாது என்று கூறினார். ஆனால் அந்தப் பெண்ணும் கோபி நைனாரும் அந்தப் படத்தின் பூஜை சமயத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலானது. அதனால் கோபி நயினார் சொல்வது பொய் என்று தெரிய வர விசாரணை கொஞ்சம் தீவிர படுத்தப்பட்டது.

aram1
aram1

இது சம்பந்தமாக கோபி நயினாரின் உதவி இயக்குனரான ராஜ்கமல் இடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். அதாவது ராஜ்கமல் கோபி நைனாருடன் கிட்டத்தட்ட 3 வருடங்களாக உதவி இயக்குனராக இருக்கிறாராம். அவருடன் சேர்ந்து ஐந்து உதவியாளர்களும் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்களாம்.

ஆனால் இதுவரை சம்பளமாக ஒரு பைசா கூட கோபி நயினார் தங்களுக்கு தந்ததில்லை என்று ராஜ்கமல் கூறினார். அதன் காரணமாகவே எங்களுடன் இருந்த இன்னொரு உதவி இயக்குனர் தற்கொலையை செய்து கொண்டார் என்றும் கூறினார். அதுவும் அவருக்கு திருமணம் ஆகி மனைவியை சொந்த ஊரில் விட்டுவிட்டு இங்கு தங்கி வேலை பார்த்தாராம்.

அவர் சிஜியில் நல்ல அனுபவம் உள்ளவர் ஆக இருந்ததால் மற்ற வெளி வேலைகளை செய்து கொடுத்து வந்தாராம். ஆனால் கோபி நையினார் சம்பளம் என்று ஒரு பைசா கூட கொடுக்காததனால் ஊருக்கு போவதற்கு முன்பு இவர்களிடம் பேசிவிட்டு சென்றாராம். அப்போது அந்த உதவி இயக்குனர் ராஜ்கமல் இடம் நான் சாப்பிட்டு ஒரு நாள் ஆச்சு எனக்கு டீ வாங்கி கொடு என்று கேட்டாராம்.

aram2
aram2

டீ வாங்கி கொடுத்து கையில் 200 ரூபாயும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தாராம். ஊருக்கு போன ஒரு வாரத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் மட்டுமே இவர்களை வந்து சேர்ந்திருக்கிறது. இப்படி அறம் படத்த எடுத்த இயக்குனர் அறம் தவறாமல் இருப்பாரா என்று நினைப்பது தவறு. இன்னும் நிறைய வேலைகளை பார்த்திருக்கிறார் என்று கோபி நயினார் மீது ஏகப்பட்ட புகார்களை கூறினார் ராஜ் கமல்.

இதையும் படிங்க : கண்ணதாசனின் கடினமான வரிகளுக்கு ட்யூன் போட்ட எம்.எஸ்.வி!.. எம்.ஜி.ஆர் அடித்த செம கமெண்ட்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.