அஜித் நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்களை மகிழ்விக்க வரும் திரைப்படம் ‘துணிவு’ திரைப்படம். இந்த படம் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் தயாராகி இருக்கும் ஒரு ஆக்ஷன் கலந்த திரைப்படம். ஒரு வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாக இருக்கிறது.
மேலும் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் அந்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதனால் இந்த துணிவு திரைப்படம் வினோத்திற்கு ஒரு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதைப் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் வினோத்.
அவருடைய அனுபவங்களை பகிர்ந்த வினோத் துணிவு படத்தில் நடந்த சில விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார். அஜித் 15 நிமிடங்கள் மட்டுமே கதையை கேட்பாராம். அதனால் ஷூட்டிங்கில் அன்னிக்கு என்ன எடுக்க போறாங்களோ அந்த ஸ்கிரிப்டை மட்டும் சொல்லுவார்களாம். கதை பிடித்தால் மட்டுமே ஓகே சொல்லுவாராம் அஜித்.
மேலும் விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றி ஒரு மார்கெட்டையே உருவாக்கியிருந்தது. அதை மனதில் வைத்து தான் வலிமை ஸ்கிரிப்ட் எழுதினோம். ஆனால் இரண்டு வருட லாக் டவுன் காலம் அந்த மார்கெட்டை வேற மாதிரி கொண்டு சென்று விட்டது என்றும் கூறினார். மேலும் ஒரு டைரக்டருக்காக படம் பார்க்க வருகிறவர்கள் வெறும் 10 % தான் இருப்பார்கள். ஆனால் அந்த இடத்தை அடைய எந்த அளவுக்கு கடின உழைப்பு கொடுக்க வேண்டியிருக்கு என்று அதில் இருக்கிறவர்களுக்கு தான் தெரியும் என்று தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் வினோத்.
இதையும் படிங்க : ‘ஜாலியோ ஜிம்கானா’ விஜய் பாட்டுனு தான் எல்லாருக்கும் தெரியும்!.. அடிக்கல் போட்ட பழம்பெரும் பிரபலம் யாருனு தெரியுமா?..
மேலும் சதுரங்க வேட்டை , தீரன் அதிகாரம் இது மாதிரி படங்கள் மீண்டும் எப்பொழுது எடுப்பீர்கள் என்று கேட்கும் ரசிகர்களுக்காக அதே மாதிரி படம் எடுத்தால் இவன் இத தவிர வேற மாதிரி படமே எடுக்கத் தெரியாதா என்று கேட்பவர்கள் அதே ரசிகர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் கூறினார். மேலும் துணிவு படத்தை சுற்றி வரும் நிறைய செய்திகள் உண்மையில்லை எனவும் துணிவு படம் வில்லன்களின் விளையாட்டு எனவும் அயோக்கியர்களின் ஆட்டம் எனவும் ஒரு ஹிண்ட் கொடுத்து பேட்டியை முடித்தார் வினோத்.
இவர் சொல்வதில் இருந்து பார்த்தால் கொள்ளைக் கூட்ட தலைவனாக காட்டியிருப்பாரோ அஜித்தை என்று யோசிக்க வைக்கிறது. என்னவாக இருந்தாலும் பொங்கல் வரைக்கும் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…