காசு வாங்குற… ஒழுங்கா இருக்கமாட்டியா??... சிம்புவை மிரட்டி வேலை வாங்கிய பிரபல இயக்குனர்..
சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர். தனது தந்தையான டி. ராஜேந்தர் இயக்கிய பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சிம்பு, “காதல் அழிவதில்லை” திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின் “தம்”, “அலை” என பல திரைப்படங்களில் நடித்த சிம்பு, இளம் பெண்களிடையே “மன்மதனாக” திகழ்ந்தார். தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பெயர் வாங்கிய சிம்பு, அதன் பின் யங் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.
தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்த சிம்புவின் மேல் ஒரு கட்டத்தில் பல விமர்சனங்கள் எழுந்தது. சிம்பு ஒழுங்காக ஷூட்டிங் வருவதில்லை எனவும், டப்பிங் பேசுவதற்கு கூட வரமறுக்கிறார் எனவும் பல செய்திகள் பரவியது.
இதற்கு நடுவே சிம்பு, இமயமலைக்கு செல்வதாகவும் சாமியார் ஆக விரும்புவதாகவும் கூறி வந்தார். எனினும் பல விமர்சனங்களுக்கு பிறகு தனது உடலை மெருகேற்றி கம்பேக் கொடுத்தார் சிம்பு. “ஈஸ்வரன்”, “மாநாடு”, “வெந்து தணிந்தது காடு” ஆகிய திரைப்படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை “ஓ” போட வைத்தார்.
இதனிடையே சிம்பு வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் “கோவில்”. இத்திரைப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார்.
இந்த நிலையில் “கோவில்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஹரி, சிம்புவை மிரட்டிய சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அதாவது படப்பிடிப்பு தொடங்கிய முதல் மூன்று நாட்கள் சிம்பு படப்பிடிப்புத் தளத்திற்கு மிகவும் தாமதமாக வந்திருக்கிறார்.
இப்படி ஒரு நாள் சிம்பு தாமதமாக படப்பிடிப்பிற்கு வந்தபோது இயக்குனர் ஹரி, அவரின் உதவி இயக்குனரை சத்தம் போட்டு அழைத்திருக்கிறார். படப்பிடிப்பு செட்டில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும்படி “உனக்கு சம்பளம் தருகிறேனா இல்லையா? இன்னைக்கு 9 மணிக்கு ஷூட்டிங்ன்னு சொல்லிருந்தேன் அல்லவா? 11 மணிக்கு வந்துட்டு இருக்க. ஒழுங்கா இரு, இல்லைன்னா தொலச்சிடுவேன். உன் வேலையை யார் பார்ப்பா, காசு வாங்குறேல” என கோபமாக கத்தியிருக்கிறார்.
இதனை பார்த்துக்கொண்டிருந்த சிம்பு, இயக்குனர் நம்மைத்தான் இப்படி திட்டுகிறார் என உணர்ந்துகொள்கிறார். அதன் பின் சிம்பு சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்தாராம். இந்த சம்பவத்தை சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதான் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.