Connect with us
banner

கூட்டத்தில் கெட்ட வார்த்தை பேசிய ஹரி.! **ம்மால தூக்கி போட்டு மிதிச்சிருவேன்., அதிர்ந்து போனது அரங்கம்.!

Cinema News

கூட்டத்தில் கெட்ட வார்த்தை பேசிய ஹரி.! **ம்மால தூக்கி போட்டு மிதிச்சிருவேன்., அதிர்ந்து போனது அரங்கம்.!

ஐயா, சாமி, ஆறு, வேல், சிங்கம் பல்வேறு ஆல் டைம் ஃபேவரைட் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, மீண்டும் தான் ஒரு கமர்ஷியல் கிங் இயக்குனர் என நிரூபிக்க யானை பலத்துடன் தனது மாப்பிள்ளை அருண் விஜய் உடன் கைகோர்த்து வரும் வரும் ஜூன் 17ஆம் தேதி களம் இறங்குகிறார்.

முதலில் சூர்யா நடிக்க ‘அருவா’ எனும் திரைப்படத்தை இயக்கும் சூழலில் இயக்குனர் ஹரி ஈடுபட்டிருந்தார். ஆனால், ஏனோ சில காரணங்களால் அந்தப் படம் நிறுத்தி வைக்கப்படவே, உடனடியாக யானை எனும் தலைப்பில் வேறு கதைக்களத்துடன் அருண் விஜய் கதாநாயகனாக வைத்து படத்தை முடித்து விட்டார் இயக்குனர் ஹரி.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், பத்திரிக்கையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது இந்த படம் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

அந்த சமயம் படத்தின் கதைக்களம் பற்றி இயக்குனர் ஹரி விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவன் தன் குடும்பத்தை தோளில் சுமந்து வாழ்கிறான்.  தனது நண்பனை தோளில் சுமந்து வாழ்கிறான். அப்போது அவனுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. **ம்மாலே எல்லாத்தையும் தூக்கி போட்டு மிதிக்கிறான்’ என்று உணர்ச்சிவசப்பட்டு கூட்டத்தில் கெட்ட வார்த்தை பேசி விடுவார்.

இதையும் படியுங்களேன் – அருவா பக்கத்துல தான் இருக்கு., வேணும்னா எடுத்துருவேன்.! பத்திரிகையாளரை பதற விட்ட ஹரி.!

உடனே கூட்டம் சிரிப்பலையால் அதிர்ந்து போனது. சுதாரித்துக்கொண்ட இயக்குனர் ஹரி, என்னவென்று விசாரித்தார். உடனே அது ஒரு எமோஷனில் பேசிவிட்டேன் என்று அதனை சமாளித்து விடுவார்.

இயக்குனர் ஹரி ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் பரபரப்பாகவே இருப்பார் என்பதும் நமக்கு தெரியும். சமீபத்தில் ஒரு வீடியோ கூட வெளிவந்திருந்தது. அதில் ஷூட்டிங்கில் ஒரு கார் சாவியை யாரோ ஒருவர் மறந்துவிட, உடனே கெட்டவார்த்தை போட்டு சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள உதவி இயக்குனர்களை திட்டுவார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிகவும் வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top