போங்கடா தமிழ் சினிமாவே வேண்டாம்!.. ஆந்திரா பக்கம் செல்லும் ஹிட் பட இயக்குனர்....

தற்போது தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு போதாதா காலம் போல, சூப்பர் ஹிட் கொடுத்த பல இயக்குனர்கள் தெலுங்கு பக்கம் சென்று விட்டனர். இது வழக்கமான ஒன்று தான் . ஆனால்,அவர்கள் ரிட்டயர்டு ஆகும் சூழலில் தான் அடுத்த மொழிப்பக்கம் செல்வார்கள் . ஆனால் தற்போது பலரும் தாங்கள் நல்ல மார்க்கெட் நிலவரம் உள்ள போதே சென்று வருகின்றனர்.
தற்போது இந்த லிஸ்டில் புதியதாக பேசப்படுபவர் இயக்குனர் ஹரி. ஒரு காலத்தில், சாமி, சிங்கம் என மெகா ஹிட்களை தமிழ் சினிமாவுக்கு வாரி வழங்கிய இயக்குனர் ஹரி, அடுத்தடுத்து, சிங்கம் 3, சாமி 2 போன்ற படங்களை கொடுத்ததால் மீண்டும் தன்னை நிரூபிக்கும் கட்டம் வந்துவிட்டது.
அதற்காக, இயக்குனர் ஹரி, நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து யானை எனும் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது. விரைவில், அதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன் - நஸ்ரியா புருஷனை கிழித்தெறிய காத்திருக்கும் விமர்சகர்கள்.! இதுதான் நடக்கபோகுதா.?!
அதற்கிடையில், இயக்குனர் ஹரி அடுத்ததாக தெலுங்கு படத்தை இயக்க உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. அங்கு கிராமத்து பின்னணியில் ஆக்சன் கமர்சியல் படமாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இதற்காக ஒரு பெரிய ஹீரோவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.