ஏன் சிங்கம் படம் வெற்றி பெற்றது தெரியுமா? டைரக்டர் ஹரியின் மாஸ் பார்முலாக்கள்... குட்டி ரீகேப்...
சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை டைரக்டர் ஹரி இயக்கி இருக்கிறார். முதல் பாகத்தில் பிரகாஷ்ராஜ் வில்லத்தனம் பெரிதாக பேசப்பட்டது. அவரை மற்ற இரண்டு பாகங்களின் வில்லன்கள் பெரிதாக ஓவர் டேக் செய்ய முடியவில்லை என்பது முக்கியமான சேதி. இதனால் அவர்கள் இருக்கும் இடத்தினை பிரம்மாண்டமாக காட்டியே அவர்களின் மாஸ்ஸை அதிகரித்து இருந்தனர்.
இப்படத்தில் துரைசிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். இவருக்கு மனைவியாக அனுஷ்கா நடித்தாலும் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் மற்ற பாகங்களில் நடித்து இருந்ததனர். இப்படம் சந்தேகத்திற்கு இடமே கொடுக்காமல் மாஸ் ஹிட் வெற்றி பெற்றது. இதற்கு ஹரி சில மாஸ் பார்முலாக்களை திரைப்படத்தில் பயன்படுத்தினார். அதே பாணியை தனது எல்லா படத்திலும் வைத்திருப்பார் என்பது உங்களுக்கு தெரியுமா?
அதிவேக திரைக்கதை:
முதலில் படத்தின் ஸ்பீட் திரைக்கதை. அதாவது படத்தின் மூன்று மணிநேரத்தில் எந்த இடத்திலும் சிறு கேப் கூட விடாமல் சேசிங், பைட்டிங் என கலைக்கட்டும். இதனால் படத்தில் இது சரியா, அது சரியா என யோசிக்கவே முடியாது. அதை ரசிகர்கள் யோசித்தால் தான் ட்ரோல் செய்யலாம் என நினைக்க தோணும். படத்துடன் ஒன்றிய மாஸ் காட்சிகளால் பெரிதாக மிஸ் ஆகும் லாஜிக்களை தவறவிட வைத்து விடுவார் இயக்குனர் ஹரி.
பிரம்மாண்ட செட்:
அடுத்து சிங்கம் படத்தின் பாடல்கள். சூர்யாவிற்கான இன்ட்ரோவில் முழுக்க முழுக்க மாஸ் காட்சிகள் நிறைந்து இருக்கும். அதை கேட்கும் ரசிகர்களுக்கே தெறி பீல் தரும். அடுத்து டூயட் பாடல்கள் அதற்கும் தனியாக செட் போட்டு சூர்யாவும், அனுஷ்காவும் போட்ட ஆட்டங்கள் ரசிகர்களையே ஆட வைத்தது.
பெரிய குடும்பம்:
பொதுவாக சிங்கம் படத்தில் மட்டுமல்லாமல் ஹரியின் எல்லா படங்களிலுமே ஹீரோவிற்கு ஒரு பெரிய குடும்பமே இருக்கும். ஹீரோவை அழிக்க நினைக்கும் வில்லன்கள் அவரின் குடும்பத்தினை கொல்ல முயற்சிப்பர். அப்போது ஹீரோ காட்டும் மாஸ் ஆக்ஷன்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அதேப்போல தான் சிங்கம் படத்தில் சூர்யாவிற்கும் பெரிய குடும்பமே இருக்கும். அவர்களுக்காக சூர்யா போட்ட சண்டைக்கே படம் சூப்பர்ஹிட் என்ற ஒரு கூட்டம்.
இப்படி சிங்கம் படத்தில் மட்டுமல்லாமல் தனது எல்லா படங்களிலுமே தனது அக்மார்க் பார்முலாக்களை தொடர்ந்து இயக்குனர் ஹரி ஃபாலோ செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இனிமே இந்த பாயிண்ட்கள் எல்லாம் அவர் படங்களில் இருக்கிறதா என்பதை நீங்களும் நோட் பண்ணுங்க...