Director Hari: தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எந்தளவுக்கு வேகமாகவும் விறுவிறுப்பாகவும் எடுக்கவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் இயக்குனர் ஹரி. தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான ஹரி தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். தூள், தாமிரபரணி, சாமி, சிங்கம் , பூஜை போன்ற ஆக்ஷன் நிறைந்த வெற்றிப்படங்களை கொடுத்த ஹரி தற்போது விஷாலை வைத்து ரத்னம் என்ற படத்தை எடுத்திருக்கிறார்.
ஏற்கனவே விஷாலுடன் தாமிரபரணி மற்றும் பூஜை படங்களை கொடுத்த ஹரி ரத்னம் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். அதனால் இந்த முறையும் ரத்னம் திரைப்படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசி வருகிறார்கள். கதையையும் தாண்டி ஹரியின் திரைப்படம் போரடிக்காத வகையில் விறுவிறுப்பாக போகும் என்பதால் எப்பவுமே அவர் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும்.
இதையும் படிங்க: தலைவர் 171 பட டைட்டில் இதுதான்!.. வெளியான வீடியோ!. இது நம்ம சரத்குமார் பட டைட்டில் இல்ல!…
ரத்னம் திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதனால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு இருந்து வருகிறது. விஷாலின் நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதனால் விஷால் ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் ஹரி, விஷால் மற்றும் படக்குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட படத்தின் ஹீரோயின் மட்டும் எங்குமே தலைகாட்ட வில்லை. அதுமட்டுமில்லாமல் படத்தின் போஸ்டரிலும் பெரிதாக காணப்படவில்லை. விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். ஹீரோயின் எங்கே? என்று பத்திரிக்கையாளர் கேட்கையில் ஹரி ‘அவர் வெளியூர் படப்பிடிப்பில் இருப்பதாக சொன்னார்.’
இதையும் படிங்க: விஜயை காப்பி அடிக்கிறீங்களா? சைக்கிளில் வந்த ரகசியத்தை பகிர்ந்த விஷால்.. நிலைமை மோசமா இருக்கு போல
ஆனால் உண்மையிலேயே பிரியா பவானி சங்கரிடம் ப்ரோமோஷனுக்கு இரண்டு வாரம் கால்ஷீட் வாங்கியிருந்தாராம் ஹரி. அதற்கு சம்மதித்து பிரியா பவானி சங்கரும் வேறெந்த படத்திற்கும் கால்ஷீட் கொடுக்காமல் காத்துக் கொண்டிருந்தாராம். ஆனால் ஹரியிடம் இருந்து பிரியா பவானி சங்கருக்கு அழைப்பே வரவில்லையாம். ஆனால் அவர் வெளியூர் படப்பிடிப்பிற்கு சென்று விட்டார் என கூசாமல் பொய் சொல்லியிருக்கிறார் ஹரி. ஒருவேளை இயக்குனருக்கும் நடிகைக்கும் எதாவது பிரச்சினை இருக்குமோ என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…