More
Categories: Cinema News latest news

கமலிடம் மாட்டிக்கொண்டு முழித்த ஹரி!.. ஜஸ்ட் மிஸ்!.. நல்லவேளை உண்மைய சொல்லிட்டாரு!..

Kamal Hari: இன்று தமிழ் சினிமாவில் படங்களை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் எடுப்பதில் ஹரியை தவிர வேறு எந்த இயக்குனர்களும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்து விடும். அந்தளவுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இவருடைய படங்கள் ரசிகர்களை கவர்ந்துவருகிறது. முதலில் உதவி இயக்குனராக இருந்து இயக்குனரானவர் ஹரி.

அதுவும் கே.பாலசந்தர் பள்ளியில் படித்தவர். அவருடன் சேர்ந்து பணியாற்றுவதற்கே ஹரி நிறைய ஹோம் வொர்க்கள் எல்லாம் செய்து கொண்டுதான் போனாராம். அந்தளவுக்கு பாலசந்தர் பெருமைகளை ஒரு பேட்டியின் போது பேசிக் கொண்டிருக்க பாலசந்தரால அறிமுகமான இரு சாம்ராஜ்யங்கள் கமல் , ரஜினி இவர்களை பற்றியும் ஹரி கூறினார். பாலசந்தர் செதுக்கிய சிலை என்பதற்கு உதாரணமாக கமலுடன் தன்னுடைய அனுபவம் ஒன்றை ஹரி பகிர்ந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: பேரும் புகழும் சும்மா வந்துருமா என்ன? விஜயின் ஆஸ்தான குரு யார் தெரியுமா? அட இவரா?

யானை பட ஃபைனல் வொர்க் போயிட்டு இருந்தது. அப்போது கமலை அருண் விஜயுடன் சேர்ந்து ஹரி பார்க்க சென்றார். அந்த நேரத்தில்தான் விக்ரம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்தது. அதுவரை விக்ரம் படத்தை ஹரி பார்க்கவே இல்லை. திடீரென விக்ரம் படத்தை பார்த்தீர்களா என கமல் கேட்டால் என்ன செய்வது என பயந்து கொண்டே இருக்க நினைத்த மாதிரியே கமல் அந்த கேள்வியை கேட்டார்.

இருந்தாலும் பொய் சொல்லாமல் ‘இல்ல சார். இந்தப் படத்தோட ஃபைனல் வொர்க் போய்கிட்டு இருக்கு. இன்னும் பார்க்கல’ என ஹரி சொல்லியிருக்கிறார். அதன் பிறகு கமலே ‘எனக்கு தெரியும். ஒரு படத்தோட ஃபைனல் வொர்க் போகும் போது வேறெந்த வேலைகளிலும் நம் கவனம் சிதறாது’ என கூறினாராம்.

இதையும் படிங்க: அர்ஜூனரு வில்லு பாடலில் நடந்த தப்பு… ஓபனாக ஒப்புக்கொண்ட இயக்குனர் தரணி!…

அதன் பிறகு ஹரி யோசித்தாராம் ‘ நல்ல வேளை கமல் கேட்டதற்கு ஆமா சார் பார்த்தேன் என பொய் சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும்’ என்று. நல்ல வேளை பொய் சொல்லி மாட்டியிருப்போம் என நினைத்துக் கொண்டாராம் ஹரி. இந்தளவுக்கு கமல் எல்லாமும் தெரிந்த ஒரு மனிதர். இந்தளவுக்கு தெளிவு சினிமா மீது அவர் கொண்ட நாட்டம் எல்லாம் எங்கு இருந்து வந்தது என்றால் பாலசந்தர்தான் என ஹரி கூறினார்.

Published by
Rohini

Recent Posts