சூர்யாவுக்கு எழுதின கதையா அது?.. தலையெழுத்து!.. நொந்து கொள்ளும் இயக்குனர்..

surya
தமிழ் சினிமாவில் சூர்யா எப்படி ஒரு அந்தஸ்தில் இருக்கிறார் என்று அனைவராலும் இப்போது உணரமுடிகின்றது. சத்தமே இல்லாமல் காய் நகர்த்தி வரும் சூர்யா நடிப்பு, தயாரிப்பு என அவரது வேலையில் சரியாக கவனமுடன் செயல்பட்டு வருகிறார்.

surya1
ஆரம்பத்தில் சூர்யாவின் பயணம் சற்று மேடுபள்ளமாக தான் இருந்தது. அவரது வாழ்க்கை பாழாகிவிடுமோ என்று கூட சில நேரங்களில் சிவக்குமார் எண்ணியதுண்டு. ஆனால் அதையெல்லாம் தகர்ந்தெறிந்து விட்டு இன்று ஒரு தேசிய விருது நாயகனாக பல கோடி பட்ஜெட் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சூர்யா.
இந்த நிலையில் சூர்யாவின் ஒரு படத்தின் அனுபவத்தை பற்றி இயக்குனரும் நடிகருமான ரமேஷ் கண்ணா ஒரு தகவலை பகிர்ந்தார். சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த படங்களில் ஆதவன் படமும் ஒன்று. அந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தான் இயக்கியிருந்தார்.

vijayakanth
சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். அப்போது உள்ள சூழ்நிலையில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக சூர்யாவிற்கு அந்தப் படம் ஓரளவு நிம்மதியை தந்தது. ஆனால் அந்தப் படத்தில் முதலில் நடிக்க வேண்டியிருந்தது விஜயகாந்த் தானாம்.
இதைப் பற்றி ரமேஷ்கண்ணா கூறும்போது ‘ஆதவன் படம் சூர்யாவுக்கு எழுதின கதையா?’ என்று சொல்லிவிட்டு தலையில் அடித்துக் கொண்டார். அதன்பின் தொடர்ந்த ரமேஷ் கண்ணா ‘அந்தப் படம் விஜயகாந்திற்காக எழுதப்பட்டது’ என்று கூறினார். மேலும் விவேக்கும் ரமேஷ்கண்ணாவும் ஒரு சமயம் பேசிக்கொண்டிருந்த போது விவேக் ராவுத்தரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம்.

ramesh kanna
அப்போது விவேக் ரமேஷ்கண்ணாவிடம் விவேக் ‘விஜயகாந்திற்காக ஒரு கதை எழுது, ராவுத்தரிடம் சொல்லி கேப்டனை நடிக்க வைக்கலாம்’ என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு இருவரும் பீஜ்ஜில் இருந்து கதை விவாதத்தில் இருந்து ஒரு கதையை எழுதியிருக்கின்றனர். அதை ராவுத்தரிடம் சொல்ல அவருக்கும் பிடித்துப் போய்விட்டதாம்.
இதையும் படிங்க : அப்பாஸ் பெட்ரோல் பங்கில் வேலை செய்ய காரணமாக இருந்த அந்த சம்பவம்.. என்ன தெரியுமா?
அதை கேப்டனிடம் சொல்லச் சொல்லியிருக்கிறார் ராவுத்தர். விஜயகாந்தும் கதையை கேட்டுவிட்டு கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். கே,எஸ்.ரவிக்குமாரையும் ஓகே செய்துவிட்டனராம், ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் கேப்டனால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லையாம், இதை ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியின் போது கூறினார்.