More
Categories: Cinema News latest news

சர்ச்சை சாமியாருக்கு ஜெயிலுக்குள் வைத்து கதை சொன்ன பிரபல இயக்குனர்… இவர்தான் புரொட்யூசரா?? என்னப்பா சொல்றீங்க!!

“வேலை”, “என்னவளே”, “ஜூனியர் சீனியர்” போன்ற திரைப்படங்களை இயக்கியவர் ஜெ.சுரேஷ். இவர் தற்போது குக் வித் கோமாளி புகழை வைத்து “ஜூ கீப்பர்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதில் இவர் இயக்கிய “ஜூனியர் சீனியர்” திரைப்படம் சரியாக ஓடவில்லை. ஆதலால் இவருக்கு அடுத்த படத்தை இயக்கக்கூடிய வாய்ப்பு அமையவில்லை. இவர் இயக்குனர் ஆவதற்கு முன்பு விளம்பரப்படத் துறையில் இருந்ததால் மீண்டும் பல விளம்பரப் படங்களை இயக்கச் சென்றுவிட்டார்.

Advertising
Advertising

J Suresh and Pugazh

அந்த நேரத்தில் கார்த்தி என்ற வழக்கறிஞருடன் சுரேஷுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வழக்கறிஞருக்கும் சினிமாத்துறையின் மீது மோகம் அதிகமாக இருந்ததால் அவரும் சுரேஷும் தினமும் சந்தித்து சினிமா குறித்து பல விஷயங்களை பேசிக்கொள்வார்களாம்.

அப்போது தன்னிடம் ஒரு புதிய திரைப்படத்திற்கான கதை இருப்பதாக சுரேஷ் கூற, வழக்கறிஞரும் “சரி கூறுங்கள்” என கதையை கேட்க தயாரானார். அதன் பின் சுரேஷ் தான் உருவாக்கியிருந்த கதையை கூற, அந்த கதை வழக்கறிஞருக்கு பிடித்துப்போனது.

தானே அத்திரைப்படத்தை தயாரிப்பதாக வழக்கறிஞர் கூற, “ஹீரோ யார்?” என கேட்டிருக்கிறார். அதற்கு சுரேஷ், “நானே ஹீரோவா நடிக்கிறேன்” என்று பதிலளிக்க, வழக்கறிஞரும் சரி என்று ஒப்புக்கொண்டாராம்.

J.Suresh

எனினும் வழக்கறிஞரிடம் அதிகமாக பணம் இல்லை. ஆதலால் சுரேஷிடம் “எனக்கு தெரிந்த ஃபைனான்சியர் ஒருத்தர் இருக்கிறார். அவரிடம் சென்று கதையை கூறலாம். நிச்சயமாக பணம் தருவார். ஆனால் அவர் வெளியூரில் இருக்கிறார். அவரைச் சென்று பார்க்கலாம், கிளப்புங்கள்” என்று அப்போதே அவரை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் வழக்கறிஞர்.

அங்கே ஒரு இரவு அறை எடுத்து தங்கிவிட்டு அடுத்த நாள் வழக்கறிஞர் சுரேஷை கடலூருக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். அதுவும் கடலூரில் உள்ள சிறைச்சாலைக்கு.

“என்ன சார், ஜெயிலுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என சுரேஷ் கேட்க, அதற்கு வழக்கறிஞர் “ஃபைனான்சியர் உள்ளேதான் இருக்கிறார்” என கூறியிருக்கிறார். சுரேஷுக்கு ஷாக் ஆகி விட்டதாம். அதன் பின் சிறைச்சாலையின் வரவேற்பறையில் இருவரும் காத்திருக்க, சிறைச்சாலைக்குள் இருந்து கைதிகள் வழக்கம்போல் அணியும் ஆடையை அணிந்துக்கொண்டு ஒருவர் வந்திருக்கிறார். அவர் வந்தபோதுதான் அவர் யார் என்று சுரேஷுக்கு தெரிந்திருக்கிறது. வந்தவர் பிரேமானந்த சாமியார்.

இதையும் படிங்க: “அவர் பேரை கெடுக்குறதுக்குன்னே வருவீங்களா?”… கேமராமேனை லெஃப்ட் ரைட் வாங்கிய மம்மூட்டி… அப்படி என்ன நடந்தது??

Premananda

சாமியாரை பார்த்தவுடன் ஷாக் ஆகிவிட்டாராம் சுரேஷ். “இவருக்கா கதை சொல்லப் போகிறோம்” என்ற தனது நிலைமையை நினைத்து நொந்துக்கொண்டாராம். பிரேமானந்தா சாமியார் வந்தவுடன் வழக்கறிஞர் காலில் விழ, அதனை பார்த்த சுரேஷும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாராம்.

அதன் பின் சுரேஷிடம் கதை கேட்ட சாமியார் “கதை ரொம்ப அற்புதமாக இருக்கிறது. ஷூட்டிங் எங்க வச்சிக்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கீங்க?” என கேட்டாராம். அதற்கு சுரேஷ் “எதாவது மலை பிரதேசத்தில் வைத்து படமாக்கினால் நன்றாக இருக்கும்” என கூற, அதற்கு சாமியார் “நான் பிறந்த நாடான ஸ்ரீலங்காவில் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளுங்கள். அங்கே சென்று லொக்கேஷன் பாருங்க” என கூறினாராம்.

அதன் பிறகு ஸ்ரீலங்காவில் லொக்கேஷன் பார்க்கச் சென்றாராம் சுரேஷ். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, சாமியார் மீது போடப்பட்ட வழக்கு மிக கடினமாக ஆனதால், பட வேலைகள் தாமதமாகிக்கொண்டே போனதாம். ஆதலால் அந்த புராஜெக்ட் அப்படியே டிராப் ஆகிவிட்டதாம்.

Premananda

சுவாமி பிரேமானந்தா மீது பாலியல் மற்றும் கொலை குற்றம் சுமத்தப்பட்டிருந்ததால் ஆயுள் தண்டனை பெற்ற கைதியாக தனது இறுதி நாள் வரை சிறைச்சாலைக்குள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Arun Prasad

Recent Posts