சினிமாவுக்காக பஞ்சு அருணாச்சலம் சொல்ல எச்சில் இலையை எடுத்த பிரபல இயக்குனர்...!
தமிழ்சினிமாவில் வித்தியாசமான பல படங்களை இயக்கிய புதுமை இயக்குனர் கே.பாலசந்தர். இன்னும் 30 ....40 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கப் போகும் சம்பங்களை முன்கூட்டியே உத்தேசமாக ஆராய்ந்து படங்களை எடுக்கும் அற்புதமான இயக்குனர். இவரைப் பற்றி தயாரிப்பாளர் இராம அரங்கண்ணல் ஒருமுறை இவ்வாறு கூறினார்.
நீங்கள் எப்படி டைரக்டர் ஆனீர்கள் என்று கேட்டேன். அதற்கு நான் இன்னும் டைரக்டர் ஆகவில்லையே என்றார். 4 படங்களை டைரக்ட் செய்து விட்டீர்கள். இப்படிச் சொல்கிறீர்களே என்றேன். ஒவ்வொரு படத்திலும் டைரக்டர் ஆக நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் இன்னும் முழுமையாக ஆகவில்லையே என்றார். மேலும் அவர், இந்தத் துறையில் நான் தெரிந்து கொள்ளாத பல விஷயங்கள் இருக்கும்போது என்னை ஒரு இயக்குனர் என்று ஒப்புக்கொள்ள நான் தயாராக இல்லை.
இந்த சந்தர்ப்பத்தில் மேல்நாட்டு டைரக்டர் ஒருவரிடம் சிறந்த டைரக்டர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது அந்தப் படத்தின் டைரக்டர் பற்றிய கவனமே மனதில் தோன்றக்கூடாது. அப்படி என்றால் படம் வெற்றி என்று அர்த்தம். பார்ப்பவர்கள் படக்கதையுடன் ஒன்றிப் போய்விட வேண்டும். அப்படிப்பட்ட படத்தை இயக்குபவர் தான் சிறந்த டைரக்டர் என்றார்.
தெய்வத்தாய் படத்தில் வசனகர்த்தாவாக நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். சர்வர் சுந்தரம் நாடகத்தை பஞ்சு அருணாச்சலமும், ஏவிஎம் அவர்களும் படமாக எடுக்கத் திட்டமிட்டார்கள். அவர்கள் கொடுத்த ஊக்கமும் திரையுலகில் எனக்கு என தனி இடத்தைத் தேடித் தந்தது.
அப்போது அருணாச்சலம் ஸ்டூடியோ அதிபர் ஏ.கே.வேலன் என்னை சந்தித்தார். ஒரு படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார். அப்போது நீர்க்குமிழி கதையை அவரிடம் சொன்னேன். உடனே நீங்கள் தான் டைரக்ட் செய்ய வேண்டும் என்றார். இதைக் கேட்டதும் நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
நான் டைரக்ட் செய்வதா? எனக்கு ஒன்றும் தெரியாது சார் என்றேன். அதற்கு அவர் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் தண்ணீரில் இறங்கித் தானே ஆக வேண்டும் என்றார். ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். யோசித்து சொல்கிறேன் என்றேன்.
ஒரு வாரத்திற்குப் பின் வந்தார். இன்னுமா யோசனை என்றார். என்னால் முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று கேட்டேன். அப்போது வேலன் டைரக்டர்னா யாருன்னு எனக்கு விளக்கினார்.
ஒரு குறிப்பிட்ட கதையை குழப்பமில்லாமல் மக்களின் மனதில் பதியும்படி திரையில் சொல்பவன் தான் டைரக்டர் என்றார்.
நீர்க்குமிழி படத்திற்கான கதையை நீங்கள் சொல்லும் போதே எனக்குத் திரையில் பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டு விட்டது. உங்களால் டைரக்ட் செய்ய முடியும் என்று நான் உறுதியாக நினைக்கிறேன் என்றார்.
நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன். அதே நேரம் எனக்குள் இருந்த ஒரு உறுத்தலைக் கண்டு கொண்ட அவர் நான் எந்த விதத்திலும் திரைக்கதையில் தலையிட மாட்டேன் என்று உறுதியளித்தார்.
அதே போல படம் எடுத்து முடியும் வரை அவரின் தலையீடு இல்லை. படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு எல்லோரும் பாராட்டுக் கட்டுரையா எனக்கு எழுதிக்கிட்டு இருக்காங்க. இந்த ஊக்கத்தால் மேலும் பல படங்கள் டைரக்ட் செய்ய ஆரம்பித்தேன்.
சர்வர் சுந்தரம் படத்தில் எச்சில் இலையை எடுக்கும் வேடத்தில் ஒரு சிறுவனைப் போட நினைத்தேன். அந்த இலையை எடுக்கும் பையன் எனக்கு இந்த வேஷத்தைக் கொடுத்திருக்கிறீர்களே என்று வருத்தப்படுவானோ என்ற எண்ணம் என்னை உறுத்தியது.
அதனால் அந்த வேடத்தை நானே போட்டேன். அந்த வேடத்தை நாகேஷ் கிண்டல் அடித்தார். இந்தக் கிளீனர் வேடத்தை படத்திலும் டைரக்டர் பஞ்சு நானே செய்ய வேண்டும் என்று விரும்பினார். நானும் அது போல படத்தில் நடித்தேன்.
ஆனால் இறுதியில் அந்தக்காட்சியை பஞ்சு அருணாச்சலம் வெட்டி விட்டார். நீங்களே இப்படி நடிக்க சொல்லிவிட்டு வெட்டி விட்டீர்களே என்றேன். கதையின் வேகத்தைப் பார்க்கும்போது அந்தக்காட்சி தேவையில்லை என்றார்.