Cinema History
சண்டை மட்டும் போதுமா?!.. கொஞ்சம் கிளுகிளுப்பாவும் நடிங்க!. எம்.ஜி.ஆரை மாற்றிய இயக்குனர் இவர்தான்…
தமிழ்ப்படங்களில் நடிகர்களில் பலர் பாடல் காட்சிகளில் காதல் ரசம் சொட்டச் சொட்ட கதாநாயகிகளுடன் பின்னிப் பிணைந்து நடித்து இருப்பதைப் பார்த்திருப்போம். தற்போதைய படங்களுக்கு கவர்ச்சி நடிகைகளே தேவையில்லை. கதாநாயகிகளே போதும் போதும் என்ற அளவுக்கு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தைப் படைத்து விடுகிறார்கள்.
அந்தக் காலத்தில் படங்களில் எல்லாம் கதாநாயகன், கதாநாயகியைத் தொடவே மாட்டார்களாம். அப்படித்தான் காதல் காட்சியே எடுப்பார்களாம். வசனங்களில் மட்டுமே அவர்கள் காதல் ரசம் சொட்டும். அது மெல்ல மெல்ல ரசிகனின் ரசனைக்கேற்ப மாறியது. அந்த வகையில் எம்ஜிஆரின் காதல் பாடல்களில் கதாநாயகியைக் கட்டிப்பிடித்தாலும் சரி, அவருடன் உருண்டு விளையாடினாலும் சரி. எந்த விரசமும் தெரியாது. அப்படி நடிக்க வைத்த பெருமை ஒரு இயக்குனரையேச் சாரும். யாருன்னு பார்க்கலாமா…
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், சரோஜா தேவி நடித்த படம் கலங்கரை விளக்கம். படத்தை இயக்கியவர் கே.சங்கர். இந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. அதாவது கலங்கரை விளக்கத்தின் படிக்கட்டுகளில் மேலிருந்து கீழாக சரோஜாதேவி இறங்கி வர வேண்டும்.
அதே சமயத்தில் கீழிருந்து மேலே எம்ஜிஆர் ஏறிச் செல்ல வேண்டும். அந்தக் காட்சியை இயக்குனர் எம்ஜிஆரிடம் விளக்கினார். அதற்கு யோவ்…. இந்தப் படிக்கட்டுல ஒருத்தர் மேலே ஏறிப் போறதே கஷ்டம். அப்படி இருக்கும்போது சரோஜாதேவியும் இறங்கி வந்தா ரெண்டு பேரும் இடிச்சிக்கிட்டும், உரசிக்கிட்டும் தான் போகணும்னு சொன்னாராம் எம்ஜிஆர்.
இயக்குனர் ‘இடிச்சிக்கிட்டு உரசிக்கிட்டுப் போனா என்ன? அப்புறம் எதற்கு கதாநாயகன், கதாநாயகி ?’என்று சொன்னாராம். எம்ஜிஆரும் அப்படியே நடித்தார். இப்படி எம்ஜிஆரை கதாநாயகிகளுடன் நெருக்கமாக நடிக்கச் செய்தவர் இயக்குனர் கே.சங்கர்தான். பணத்தோட்டம் படத்தில் ஜவ்வாது மேடையிட்டு… பாடலில் குடித்தது போல கதாநாயகியைக் கட்டிப்பிடித்து ஆடச் சொன்னது இயக்குனர் தானாம்.
குடியிருந்த கோயில் படத்தில் ‘உன் விழியும் என் வாளும் சந்தித்தால்’ பாடல், பல்லாண்டு வாழ்க படத்தில் ‘போய் வா நதி அலையே’ பாடல், அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா பாடல் என எம்ஜிஆர் கதாநாயகிகளுடன் நெருக்கமாகப் பாடல் காட்சிகளில் நடிக்க வைத்த பெருமை இந்த இயக்குனரையேச் சாரும்.
சண்டைக்காட்சிகளில் மட்டுமே ஸ்கோர் செய்து வந்த எம்ஜிஆரை காதல் காட்சிகளிலும் நன்றாக பயன்படுத்தியவர் தான் இயக்குனர் கே.சங்கர் மட்டுமே.